ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு தொடர்பில் ரயில்வே பொது முகாமையாளரினால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை கடிதத்திற்கு இலங்கை ரயில் நிலைய அதிபர் சங்கம் பதிலளித்துள்ளது.
All Stories
இன்று (10) நண்பகல் 12.00 மணிக்குள் கடமைக்கு சமூகமளிக்கத் தவறும் அனைத்து ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் தமது பணியிலிருந்து விலகிச் சென்றதாக கருதப்படுவார்கள் என இலங்கை ரயில்வே பொது முகாமையாளர் எச்சரித்துள்ளார்.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அநீதியான வகையில் வேலைநிறுத்தங்களை முன்னெடுப்பதன் மூலம் பிள்ளைகள் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்துள்ளனர் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக சில பெருந்தோட்டக் கம்பனிகள் நீதிமன்றத்தை நாடியமையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் உட்பட பெருந்தோட்டத் தொழிலாளர்கள் குழுவினர்கள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் நேற்று (9 ) அமைச்சர் மனுஷ நாணயக்காரவைச் சந்தித்தனர் .
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு வழங்க வேண்டுமாயின், தற்போதைய 18% வற் வரியை 20% – 21% ஆக அதிகரிக்க நேரிடும் எனவும், அரசாங்கத்தினால் அத்தகைய கோரிக்கையை நிறைவேற்ற முடியாது எனவும் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்தார்.
பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக இன்று (08) முதல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் அறிவித்துள்ளார்.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க கோரி, கொழும்பில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவுக்கு வரும் திகதி தொடர்பில் உயர் நீதிமன்றம் பொருட்கோடலை வழங்கும் வரை ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவதை தடுக்கும் வகையில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி தொழில்முயற்சியாளர் ஒருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது தள்ளுபடி செய்வதற்கு உயர் நீதிமன்றம் இன்று(08) உத்தரவிட்டுள்ளது.
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் 2 மாத சம்பளம் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான மேலதிக நேரக் கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.
ஜூலை 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் பணி புறக்கணிப்புச் செய்யாமல் கடமைக்கு சமூமளித்த அரச ஊழியர்களுக்கு கௌரவமளிக்கப்படவுள்ளது.
அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (09) வழமைபோல இயங்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
எதிர்வரும் 9ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.