1,700 ரூபா சம்பள உயர்வுக்கு எதிரான மனுவை கம்பனிகள் வாபஸ் பெற்றன

1,700 ரூபா சம்பள உயர்வுக்கு எதிரான மனுவை கம்பனிகள் வாபஸ் பெற்றன
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1700 ரூபாவாக நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்புக்கு எதிரான தமது மனுவை, பெருந்தோட்ட நிறுவனங்கள் மீளப்பெற்றுள்ளன.
 
இது தொடர்பான வழக்கு நேற்று (06) மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பெருந்தோட்ட நிறுவனங்கள் தமது தீர்மானத்தை அறிவித்தன.
 
இதன்படி குறித்த வழக்கினை நிறைவுறுத்துவதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது.
 
பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த வேதனத்தை 1700 ரூபாவாக, வேதன நிர்ணய சபையினூடாக அதிகரித்து, தொழில் அமைச்சினால் இரண்டு வர்த்தமானிகள் வெளியாக்கப்பட்டன.
 
எனினும் குறித்த இரண்டு வர்த்தமானி அறிவித்தல்களையும் செல்லுபடியற்றதாக அறிவித்து, கடந்த மாதம் புதிய வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டது.
 
இந்தநிலையிலேயே பெருந்தோட்ட நிறுவனங்கள், வேதன அதிகரிப்புக்கு எதிரான மனுவை விலக்கிக் கொள்வதாக நீதிமன்றில் அறிவித்தன.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image