All Stories

தனியார்துறையினருக்கும் 'அக்ரஹார'வுக்கு நிகரான காப்புறுதி

தனியார் துறை ஊழியர்களுக்கு 'அக்ரஹார' சுகாதார காப்புறுதிக்கு நிகரான சுகாதார காப்புறுதியை வழங்குவதற்காக 1980 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க ஊழியர் நம்பிக்கை நிதியச் சட்டத்தில் திருத்தங்களை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதியினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமையவே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

1980 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிச் சட்டத்தில் திருத்தங்களை அறிமுகப்படுத்துதல்
தனியார் துறை ஊழியர்களுக்கு 'அக்ரஹார' சுகாதார காப்புறுதிக்கு இணையான சுகாதார காப்புறுதியை வழங்குவதற்கான பிரேரணை 2023 வரவு செலவுத் திட்ட உரையில் கௌரவ ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 1980 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க ஊழியர் நம்பிக்கை நிதியச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக, மேற்படி பிரேரணையை நடைமுறைப்படுத்துவதற்கு, நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசியக் கொள்கை அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்களால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

தனியார்துறையினருக்கும் 'அக்ரஹார'வுக்கு நிகரான காப்புறுதி

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image