All Stories
வௌிநாட்டவர்கள் அமெரிக்காவில் குடியேறும் வாய்ப்பை ஏற்படுத்தும் கிறீன்கார்ட் எனப்படும் அமெரிக்க பன்முகத்தன்மை விசா திட்டத்திற்கு இணையதளம் ஊடாக விண்ணப்பிப்பவர்கள் பொறுமையான தொடர்ந்து முயற்சித்து விண்ணப்பிக்குமாறு இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு தற்போது கத்தார் சந்தைகளில் விற்கப்படும் இறால்களை சாப்பிட வேண்டாம் என்பதாக சுகாதார அமைச்சு தகவல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜப்பானில் பராமரிப்பு சேவை பிரிவில் 1000 க்கும் மேற்பட்ட தொழில் வாய்ப்புகள் அடுத்த வருடத்தில் இலங்கை தொழிலாளர்களுக்கு கிடைக்கவிருப்பதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு அந்நிய செலாவணி அனுப்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மின்சார வாகனத்தை இறக்குமதி செய்ய அனுமதிக்கும் வகையில் செப்டெம்பர் மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு இலங்கை பாராளுமன்றத்தின் அனுமதியை கோரவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
சுற்றுலா வீசாவினூடாக மலேசியாவிற்கு சென்ற பின்னர் எந்த காரணத்திற்காகவும் பிறகு தொழில் வீசாவாக மாற்ற முடியாது என்று வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.
பிரித்தானியாவின் புதிய மன்னராக முடிசூடப்பட்ட சார்ள்ஸ் 111 முதற்தடவையாக பொதுமக்களை சந்திக்கவுள்ளதுடன் அதன் ஒரு பகுதியாக பிரித்தானியா வாழ் இலங்கையரையும் சந்தித்துள்ளார்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு பராமரிப்பாளர் பணிகள் வழங்குவதாக தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் உறுதியளித்துள்ளது.
ருமேனியாவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பல வேலைவாய்ப்புகள் உள்ளதாகவும் இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளில் இளைஞர் யுவதிகள் வாய்ப்பு நாடி விண்ணப்பிக்க முடியும் என்றும் இலங்கைக்கான ருமேனிய தூதுவர் விக்டர் சியுஜ்டியா தெரிவித்துள்ளார்.
110 புலம்பெயர் பணியாளர்கள், தொழில்வாய்ப்புக்காக தென்கொரியாவுக்கு சென்றுள்ளனர்.
இலங்கையில் இருந்து 10,000 புலம்பெயர்ந்த பணியாளர்களை அழைப்பதற்கு மலேசிய அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.