சம்பள பிரச்சினையை அடிப்படையாக கொண்டு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க போராட்டம் இன்று (13) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.
தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரர்களை இலங்கை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டு முதல் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா சம்பள உயர்வு கிடைக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் தலைமையில் ‘ அவளையும் உள்வாங்குங்கள் பொருளாதார வலுவூட்டல் மூலம் பாலின சமத்துவத்தைத் துரிதப்படுத்தல்’ எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தினம் 06.03.2024 புதன்கிழமை அன்று சாவகச்சேரியின் நகரசபையின் பொன்விழா மண்டபத்தில் இடம்பெற்றது.
ஆசிரியர் சேவை தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ள, தேசிய ஆசிரியர் சபையை நிறுவுவதற்கான சட்டமூலத்தை ஒரு மாதத்திற்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வலுவான ஜனநாயக கொள்கையை கொண்டுள்ள போதிலும் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் மிகக்குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றது.
நாட்டில் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகளவில் பதிவாகுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
டேவிட் பீரிஸ் குழுமம் சில வருடங்களுக்கு முன்னர் முச்சக்கர வண்டிகளை பழுதுபார்த்தல் மற்றும் சேவையாற்றுதல் தொடர்பான விசேட தொழில்நுட்பப் பயிற்சிகளை வழங்கி உழைக்கும் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் அவர்களுக்கு அதிக வருமானம் ஈட்டும் சுயதொழில் வாய்ப்புகளுக்கு உதவுவதற்கும் ஒரு திட்டத்தை ஆரம்பித்தது.
வடக்கு மாகாணத்தில் தற்காலிக, பதிலீட்டு, சாதாரண மற்றும் தினக்கூலி அடிப்படையில் சேவையாற்றும் 388 பேருக்கான நிரந்தர நியமனத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியை பெற்றுத்தருமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் நேரடியாக சென்று கோரிக்கை விடுத்துள்ளார்.
வடமாகாண இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்களின் இடமாற்றங்களில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து மாகாண ஆளுநரிடம் தொழிற்சங்கம் முறைப்பாடு செய்துள்ளது.
ஒன்பது மாகாணங்களிலும் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு தேவையான ஆசிரியர் நியமனங்கள் வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஆண், பெண் சமூக சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலங்கள் இரண்டும் எதிர்வரும் மே மாதம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அரசாங்க சேவையில் சர்ச்சைகளைத் தடுப்பதற்கும் சர்ச்சையைத் தீர்ப்பதற்கும் ஒரு பொறிமுறையைத் தயாரிப்பதற்காக பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.