கொரோனா தொற்றினால் தற்போதுள்ள சுகாதார பாதுகாப்பற்ற சூழ்நிலைக்கு மத்தியில் பாடசாலைகளில் நிகழ்வுகளை நடத்துவதில் சிலர் ஆர்வம்காட்டிவருவதாக தகவல்கள் கிடைத்திருப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
All Stories
இலங்கையில் கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 400ஐ கடந்துள்ளது.
நேற்று 06 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் கொவிட் தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 403 ஆக அதிகரித்துள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஆட்சேபனைகள் கிடைத்துள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
மேல் மாகாண பொது மக்களுக்கு ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராசெனெக்கா கொவிஷீல்ட் தடுப்பூசியை இன்று (15) செலுத்த ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் என்று இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நலன் உள்ளிட்ட விடயங்களை பாதுகாத்து கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் பிரச்சினை தீர்த்து கொள்வதற்கு தேவையான காலம் உள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
2020ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையை முன்னிட்டு மேலதிக வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வு என்பனவற்றை நடத்துவதற்கு எதிர்வரும் 23 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி தொடக்கம் தடை விதிக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
மாதிரி வினாப்பத்திரம் அச்சிடுதல், விநியோகித்தல் முதலானவையும் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
2020ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை மார்ச் மாதம் 01 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் அடையாளங்காணப்பட்டுள்ள புதிய திரிபடைந்த கொரோனா வைரஸ் தொடர்பில் மக்கள் அவதானத்துடன் இருப்பது மிகவும் அவசியம் என்று பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஒக்ஸ்போர்ட்- எஸ்ட்ராசெனெக்கா தடுப்பூசியை 180,000 பேருக்கு செலுத்தும் போது சுமார் 40,000 தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டிருக்கலாம் என்றுஇலங்கை அரச மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
கொழும்பில் புதிய கொரோனா திரிபுடைய இருவர் அடையாளங்காணப்பட்டுள்ளனர் என்று கொழும்பு மாநகரசபை பிரதான வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள எண்ணிக்கை விடவும் உண்மையான தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம். பொதுமக்கள் வைரஸ் பரவியுள்ளமை குறித்த தௌிவான விபரங்கள் அறியாமல் இருக்கக்கூடும் என்று பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.
குவைத் ஜசீரா ஏர்வேஸ் இலங்கை தலைநகருக்கு ஒரு புதிய சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது,.
குவைத் மற்றும் கொழும்பு இடையே வாரத்திற்கு இரண்டு முறை நேரடி விமான சேவையை இதனூடாக வழங்கப்படுகிறது.
Flights to Colombo will be on Jazeera’s expanding fleet of new Airbus A320neo aircrafts, all equipped with HEPA air filters.
விமான அட்டவணையின்படி, ஜசீரா ஏர்வேஸ் விமானம் ஜே 9 551 செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும், குவைத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு, அதிகாலை 2.35 மணிக்கு கொழும்புக்கு வந்தடையும். ஜே 9 552 திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் கொழும்பிலிருந்து அதிகாலை 3.35 மணிக்கு புறப்பட்டு காலை 7.05 மணிக்கு குவைத்தில் தரையிறங்கும்.
இச்சேவையானது இவ்வாண்டு படிப்படியாக ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்க உத்தேசித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் நியூஸ் 18 இற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தியாவுடனான உறவு ஒரு திட்டத்துடன் மாத்திரம் முடிந்து போகாது. இரு நாடுகளுக்கிடையேயான உறவு ஒரு சிறந்த நட்புறவு. இந்த நட்புறவின் மூலம் இந்த சிக்கல்களை தீர்த்து, இலங்கை இந்தியாவிற்கிடையிலான உறவை முன்நோக்கி கொண்டு செல்ல எம்மால் முடியும். இந்தியாவுடனான பாரிய திட்டங்கள், முதலீடுகள் மற்றும் ஒத்துழைப்பு நடவடிக்கைகள் தொடரும்.
மேலும், ஆரம்பம் முதல் அரசாங்கத்துக்கு கிழக்கு முனையம் தொர்பாக பாரிய அர்ப்பணிப்பு காணப்பட்டது. மூன்று அரசாங்கங்களும் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதுடன், இலங்கை துறைமுகங்கள் அதிகார சபை நடத்திய பேச்சு வார்த்தைகளின் தோல்வி இந்த பிரச்சினையில் பாரிய செல்வாக்கு செலுத்தியுள்ளது.
அதேபோன்று, கொழும்பு துறைமுகத்தின் மிகப் பெரிய துறைமுகமாக மேற்கு முனையம். நான் குறிப்பிட்ட மற்றுமொரு காரணம், இந்தியாவிலிருந்து கிடைக்கும் கொள்கலன்களாலேயே குறித்த முனையம் செயற்படுகின்றது – என்றார்.
கொவிட்-19 புதிய வைரஸ் திரிபு நாட்டில் பதிவாகியுள்ளமையால், நாடு முழுமையாக முடக்கப்படவுள்ளது எனும் செய்திகள் சமூக வலைதளங்கள் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள் வாயிலாக வெளிவந்தாலும், அவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்வது தொடர்பாக அரசாங்கத்தால் இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதேபோல், கொவிட்-19 வைரஸின் புதிய திரிபு நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் பதிவாகியுள்ளமை மற்றும் அதன் பரவல் தொடர்பான பதிவுகள் பற்றி அரசாங்கம் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவதுடன், எதிர்வரும் காலங்களில் மக்களுடைய பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய தகுந்த செயற்பாடுகளை சுகாதாரத்துறையினரின் ஆலோசனைக்கமைய மேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.