All Stories

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படுமா?

பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தில் உள்வாங்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்று தருமாறு ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் திணைக்கள பணிப்பாளருக்கு கடிதமொன்றின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்து அனுப்பப்பட்டடுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடமை பொறுப்புக்களை சரிவர செய்வதற்கு தேவையான அலுவலக உபகரணங்களை வழங்குதல். கணனி, அல்லது மடிக்கணனி மற்றும் அச்சு இயந்திரத்தை வழங்கல்.

குறைந்தது 10 நாள் கொடுப்பனவு, போக்குவரத்து செலவு அல்லது சம்பளத்தில் 3/1 பகுதியை வழங்கல்

பல்நோக்கு அபிவிருத்தி படையணி திணைக்களத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை உள்வாங்கி, உரிய பதவியுயர்வு, உரிய மதிப்பிடல் செயற்பாட்டை உருவாக்குதல்

மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பணியை இலகுவாக முன்னெடுக்க றப்பர் முத்திரையை பெற்றுக்கொடுத்தல் மற்றும் அதன் அதிகாரத்தை வழங்கல்.

வழங்கப்படும் அதிகாரத்தை எழுத்து மூலமாக வழங்கல், கடமைப் பொறுப்புக்களை மாவட்டச் செயலாளர் ஊடாக பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பி வைத்தல்

போன்ற விடயங்கள் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படுமா?

மேல் மாகாணத்தில் இன்று 57,000 பேருக்கு தடுப்பு மருந்து

மேல் மாகாணத்தில் இன்று மட்டும் சுமார் 57,000 பேருக்கு கொவிட் 19 தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளதாக பதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் இன்று 57,000 பேருக்கு தடுப்பு மருந்து

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image