கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் கொவிட் அச்சுறுத்தல் அதிகமுள்ள கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் 30 வயதுடைய மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் நேற்று முதல் கொவிட்-19 தடுப்பூசி வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
All Stories
உலக சுகாதார தானத்தினால் அங்கீகரிக்கப்படாத கொவிட் 19 தடுப்பு மருந்துகளை நாட்டுக்கு தருவிப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று அரசாங்க தாதிமார் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போது இலங்கையில் கண்டறியப்பட்டுள்ள புதிய கொவிட் 19 திரிபு உட்பட கொரோனா தொற்றில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள தடுப்பு மருந்தை பொது மக்கள் செலுத்திக்கொள்ள வேண்டும் என்று இலங்கை மருத்தவர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால், எதிர்வரும் 14 நாட்களுக்கு பின்னர் தொடர்ந்து பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஒன்றிணைந்த சுகாதார சேவையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
கொவிட்-19 நோயினால் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த இணைப்பிலும் வர்த்தமானியை பார்வையிடலாம்
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு முன்னதாக, பரீட்சை நடவடிக்கைகளில் ஈடுபவோருக்கு கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரயில்வே ஊழியர்கள் பணிநிறுத்த போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ஊடகங்களில் வௌியாகியுள்ள செய்தி ரயில்வே நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் எவ்விதத்திலும் தொடர்புபட்டிருக்கவிலை என்று அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பணியிலிருந்து நீக்கப்பட்ட தொழிலாளர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
'கிராமத்துடன் உரையாடல்' நிகழ்ச்சியைப் போன்று, 'பட்டதாரிகளுடன் உரையாடல்' நிகழ்ச்சி ஒன்றை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கோரிக்;கை விடுத்துள்ளது.
சுகாதாரத்துறைசார் 11 கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கம் கொழும்பில் போராட்டத்தை மேற்கொண்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 2021 - 2022 ஆண்டுக்கான தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
100,000 வேலைவாய்ப்பு நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள் சுகாதார சேவைகள் திணைக்களத்தில் உள்வாங்கப்பட மாட்டார்கள் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கான பயிற்சி நடவடிக்கைகள் தற்பொழுது பூர்த்தியடைந்திருப்பதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
மார்ச் 1 ஆம் திகதி தொடக்கம் சாதாரண தரப் பரீட்சையை ஆரம்பிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் 2 விசேட பரீட்சை மத்திய நிலையங்களை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றுவதில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளை திணைக்களத்தின் இணையத்தளத்தின் மூலம் திருத்தங்களை மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.