கூட்டு ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும் போதே சம்பள நிர்ணய சபையூடாக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியுமா? அவ்வாறு அதிகரிக்கப்படுமானால் கூட்டு ஒப்பந்தத்தில் இருக்கும் சரத்துகளுக்கும் என்ன நடக்கும் என்பதை நோக்கியே அனைவரினதும் கவனம் தற்போது திரும்பியுள்ளது.
All Stories
புதிய வீரியம் மிக்க வைரஸ் காரணமாக கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், நாடுமுழுவதும் முடக்க நிலையை
வைத்தியத்துறை மற்றும் ஊடகத்துறையினருக்கு முன்கூட்டியே வாக்களிப்பில் ஈடுபடும் முறைமையை நடைமுறைப்படுத்துவதற்கு தாங்கள் எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ரூபா 1000 சம்பளம் பெற்றுக் கொடுப்பதற்கு கடந்த காலங்களில் முன்னெடுக்கபப்பட்ட பல சுற்று பேச்சுவார்த்தைகளில் எவ்வித இணக்கமும் ஏற்படாத நிலையில் சமபள நிர்ணய சபை ஊடாக தீர்வு காண்பதற்கு தொழில் அமைச்சர் கடந்த வாரம் தீர்மானித்தார்.
அரச வேவையிலிருந்து நீக்கப்பட்ட, மீண்டும் அரசாங்க சேவையில் ஆட்சேர்ப்புச் செய்யப்படக்கூடாத உத்தியோகத்தர்கள் பற்றிய விபரத்தை அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
ரயில் நிலைய அதிபர்கள் நேற்று நள்ளிரவு முதல் சில கோரிக்கைகளை முன்னிவைத்து தமது கண்காணிப்பு கடமைகளில் இருந்து விலகியுள்ளனர்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேலை நாட்களைக் குறைக்கும் நடவடிக்கையில் பெருந்தோட்ட நிறுவனங்கள் ஈடுபடுமாக இருந்தால் அதற்கு பதிலடி கொடுக்க இ.தொ.கா தயாராக இருக்கிறது என்று அதன் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் பல்வேறு லஞ்ச ஊழல் குற்றங்களில் ஈடுபட்ட 600 ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர் என்று பொது நிர்வாக அமைச்சின் செயலாளர். ஜே. ஜே. ரட்ணசிறி தெரிவித்துள்ளார்.
குறித்த அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கனான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பமாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
திடீரென மோட்டார் வாகன திணைக்களத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொதுமக்களிடம் நடத்திய விசாரணைகளின் போது கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைய இந்த இடமாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆணையாளர்கள், பிரதி ஆணையாளர்கள் உட்பட 600 பேர் இடமாற்றம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
'சம்பள நிர்ணய சபையின் மூலம் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதனால், கூட்டு ஒப்பந்தத்தில் சம்பள சரத்து இரத்தாகுமேதவிர, கூட்டு ஒப்பந்தம் இரத்தாகாது. இந்த விடயத்தை உரிய முறையில் அணுகினால், கம்பனிகளால் கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற முடியாது. ஆனால், தொழிற்சங்கங்களுக்கு இது தொடர்பில் போதிய அறிவு – தெளிவு இருக்கின்றா? என்பதே கேள்வியாகும்.'
கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் நாட்டில் கொவிட் 19 தொற்று நேர்மறை வீதம் இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்த டொக்டர் ஹரித் அளுத்கே கருத்து தெரிவிக்கையில் நாட்டில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 வீதத்தால் அதிகரித்துள்ளது. ஜனவரி மாதம் 3 வீத அதிகரிப்பு காணப்பட்டது. இம்மாதத்தில் இருமடங்கு அதிகரிப்பு காணப்படுகின்றமை ஆபத்தானது. கடந்த சில நாட்களாக தொற்றாளர்கள் எண்ணிக்கை மேல் மாகாணம் மற்றும் வௌி மாகாணங்களில் அதிகரித்துள்ளமை காணக்கூடியதாக உள்ளது.
எது எவ்வாறு இருப்பினும் நாம் வௌி மாவட்டங்களில் தொற்று பரவுவதை தடுப்பதில் நாம் தோல்வியடைந்துள்ளோம். எமது தோல்வியை அடையாளங்கண்டு அதனை தடுப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுளளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் 'சௌபாக்கியத்திற்கான நோக்கு' எனும் வேலைத்திட்டத்தின் கீழ் பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுக்கும் நோக்கிலான செயற்திட்டம் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானினால் ஆரம்பிக்கப்பட்டது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதத்தில் 13 நாட்களே வேலை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன. இதனால் வருட வருமானத்தில் 69 ஆயிரம் ரூபாவை இழக்கவேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்படுகின்றது என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
சம்பள நிர்ணய சபையில் இன்றைய தினம் (2021.02.08) நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பள உயர்வை வழங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.