இலங்கை உட்பட ஆறு நாடுகளின் பயணிகளுக்கு ஜப்பான் அனுமதி

இலங்கை உட்பட ஆறு நாடுகளின் பயணிகளுக்கு ஜப்பான் அனுமதி

ஜப்பான் நாளை திங்கட்கிழமை முதல் இலங்கை உட்பட ஆறு நாடுகளைச் சேர்ந்த பயணிகளின் உள் நுழைவுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக ஜப்பான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா, மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய ஆறு நாடுகளும் தடுப்பூசி போடப்பட்டவர்கள் மற்றும் ஜப்பானில் செல்லுபடியாகும் குடியிருப்பு அந்தஸ்து உள்ளவர்கள் உட்பட வெளிநாட்டினரின் மொத்த நுழைவுத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் கொவிட்-19 பரவலின் அதிகரிப்பினால் ஜப்பானின் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நுழைவு தடை விதிக்கப்பட்டது.

ஜுன் மாதம் மேற்கண்ட நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தடை உத்தரவு, ஆறு நாடுகளுக்கும் திங்கட்கிழமை நீக்கப்படும் ஜப்பான் அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஆறு நாடுகளுக்கான நுழைவுத் தடையின் முடிவு ஜப்பானின் தனிமைப்படுத்தல் கொள்கையின் முக்கிய திருத்தத்தின் ஒரு பகுதியாகும்.

இந்த மாற்றத்தின் மூலம் கொரோனா வைரஸ் மற்றும் அதன் மாறுபாடுகளின் பரவல் காரணமாக 40 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு அரசு நியமிக்கப்பட்ட வசதிகளில் மூன்று நாட்கள் கட்டாயமாக தங்குவதற்கு அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது

கட்டாய மூன்று நாள் நடவடிக்கைக்கு உட்பட்ட வருகையாளர்கள், தனிமைப்படுத்தலில் தங்கிய மூன்றாம் நாளில், கொவிட் -19க்கான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

Nதொற்று இல்லை என உறுதியானவர்கள்வெளியேற அனுமதிக்கப்படுவார்கள், தொற்று உறுதியானவர்கள 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image