அரச ஊழியர்களை வாரத்தில் 5 நாட்களும் பணிக்கு அழைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.
All Stories
கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
பாடசாலை செல்லும் வயதுடைய மாணவர்களுக்கு பகுதி நேர வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக அரசாங்கம் முன்வைத்துள்ள புதிய திட்டத்தின் மூலம் நாட்டில் பெரும் சமூக வீழ்ச்சி ஏற்படக்கூடும் என தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.
அரச ஊழியர்கள் தமது சிரேஷ்டத்துவம் மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பில்லாத வகையில் உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் தொழில் புரிவதற்காக சுற்றுநிறுபம் 14/2022 அடிப்படையில் விடுமுறை பெற்றுக்கொள்ளும் ஒழுங்குமுறை தொடர்பாகவும் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் தொடர்பாகவும் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள்மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
அனைத்து அரச மற்றும் அரச அனுமதிபெற்ற தனியார் பாடசாலைகளும் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் வாரத்தில் 5 நாட்களும் இயங்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பான வழக்கை உயர் நீதிமன்ற தள்ளுபடி செய்து வழங்கிய தீர்ப்பின் மூலமாக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சட்டத்தின் மூலமாக நீதி கிடைத்துள்ளது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வி. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பெண்களை இரவுப் பணியில் அமர்த்துவது தொடர்பாக தற்போதுள்ள கட்டுப்பாடுகள் கொண்ட சட்ட விதிகளை திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
க.பொ.த உயர்தர மாணவர்களின் வருகை தொடர்பில் கல்வியமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.
நாட்டுக்கு பெருமை சேர்த்துவந்த சிலோன் ரீ ஏற்றுமதி 1999ஆம் ஆண்டின் பின் இவ்வருடம் பாரியளவில் வீழ்ச்சியைடைந்திருக்கின்றது.
1,000 ரூபா வேதனம் தொடர்பான மேன்முறையீ்ட்டு நீதிமன்றத் தீர்ப்பு மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு கிடைத்த வெற்றியாகும் என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது பரவிவரும் BA.4 மற்றும் BA.5 கொரோனா வைரஸூகள் மிகவும் ஆபத்தானவை, இவ் வைரஸூகளானது தொற்றாளர்களின் நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தும் என ஜோன் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் வளவாளரும், ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோய்கள் மற்றும் கொவிட் வைரஸ் தொடர்பான வைத்திய ஆலேசகர் வைத்தியர் சஞ்சய் பெரேரா தெரிவித்துள்ளார்.
அவசரகால சட்டம் உள்ளிட்ட அடக்குமுறை சட்டங்களை பயன்படுத்தி அரச நிறுவனங்களை அரசாங்கம் விற்பனை செய்ய முயற்சிப்பதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
அரசாங்கத்தின் அடக்குமுறைகளை உடனடியாக முடிவிற்குக்கொண்டுவாருங்கள்: விரைவாகப் பாராளுமன்றத்தைக் கலையுங்கள்' என வலியுறுத்தி கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் ஆரம்பமான பேரணி சுதந்திர சதுக்கத்தைச் சென்றடைந்ததுடன், அங்கு சர்வமதத்தலைவர்களின் முன்னிலையில் பிரதான 8 விடயங்களை உள்ளடக்கிய 'மக்களாணை' வெளியிடப்பட்டது.