இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினை எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
All Stories
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் கைது செய்யப்பட்டதை ஆசிரியர் விடுதலை முன்னணி வண்மையாக கண்டிப்பதாக அதன் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
ஜனநாயக ரீதியாக போராடுகின்ற நேரத்திலே அதனை ஒடுக்கும் முகமான செயற்பாடுகளை முன்னெடுப்பதை ஆசிரியர் சமூகம் என்றுமே ஏற்றுக் கொள்ளாது என்பதை தாம் வழியுறுத்துவதாகவும் தெரிவித்தார்.
கடந்த காலங்களிலே பல போராட்டங்களில் நாம் அவருடன் இனைந்து செயற்பட்டு இருக்கிறோம். சமூக முற்போக்கு சிந்தனைக் கொண்ட ஜோசப் ஸ்டாலின் அவர்களினை கைது செய்ததை தாம் வண்மையாக கண்டிப்பதோடு அவருக்கு எதிரான நடவடிக்கைகளை உடன் நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இனி வரும் காலங்களில் இவ்வாறான ஜனநாயக விரோத் செயற்பாடுகளை செய்யாமல் ஜனநாயக ரீதியான போராட்டங்களுக்கு வழி விட வேண்டும் என்பதையும் ஜோசப் ஸ்டாலின் அவர்களை உடன் விடுதலை செய்ய வேண்டும் என்றும் தாம் இந்த இடத்தில் அரசுக்கு வழியுறுத்துவதாகவும் தெரிவித்தார்.
காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு முன்னர், அங்கிருந்து வெளியேற வேண்டும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
தொழிற்சங்கங்கள் மக்கள் இயக்கத்தோடு இணைந்து அரசியல் கட்சிகளாக நாங்களும் இந்த அடக்குமுறைக்கு எதிராகப் போராடுவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்தமையானது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று முற்போக்கு ஜனநாயக ஆசிரியர் சங்கம் அதன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
கல்வியியற் கல்லூரிகளில் பயிற்சி பெறுவதற்கு 8000 இற்கும் அதிகமான மாணவர்களை இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் (பாடசாலை அலுவல்) லலிதா எகொடவெல தெரிவித்துள்ளார்.
புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை இலக்கத்தையும் உள்ளடக்கிய பிறப்பு சான்றிதழை வழங்கும் செயற்பாடுகளை ஆட்பதிவு திணைக்களம் மற்றும் பதிவாளர் திணைக்களம் என்பன இணைந்து ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் ஆரம்பித்துள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கத்தின் இலங்கை வங்கிக் கிளைச் சங்க செயலாளர் தனஞ்சய சிறிவர்தன மற்றும் இலங்கை வங்கிக் கிளைச் சங்கத்தின் முன்னாள் தலைவர் பாலித்த எடம்பாவல ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள சில பாடசாலைகள் கல்வியமைச்சின் தீர்மானத்தை மீறிச் செயற்படுவது கண்டனத்திற்குரியது, அது குறித்து கல்வி அமைச்சிடம் முறையிடத் தீர்மானித்துள்ளதாக கிழக்கு மாகாணத் தமிழ் ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.
இணைந்த சேவைகள் அலுவலர்களின் வருடாந்த இடமாற்றம் தொடர்பான அறிவுறுத்தல் பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
மின்சாரம், எரிபொருள் மற்றும் வைத்தியசாலை சேவைகளை அத்தியவசிய சேவைகளாக அறிவித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
அரச அலுவலகங்களை வெள்ளிக்கிழமைகளில் மூடுவது தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை ரத்து செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளை மாகாணசபைக்குரிய சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் ஆட்சேர்ப்பு செய்தல் 2022 காண விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.