200 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இரண்டு நாள் சுஙயீன விடுமுறை போராட்டம்
200 இற்கும் மேற்பட்ட அரசதுறைசார் தொழிற்சங்கங்கள் சுகயீன விடுமுறையை அறிவித்து நாளை (08) மற்றும் நாளை மறுதினமும் (09) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன.
அகில இலங்கை பொது முகாமைத்துவ உதவி அதிகாரிகள் சங்கம், அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கம், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் சங்கம், இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் உட்பட, அரச, பகுதிநிலை அரச மற்றும் மாகாண அரசாங்க சேவைகளை சேர்ந்த 200 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளன.
சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.