அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் ஏப்ரல் மாதத்தின் முதலாம் வாரத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
All Stories
வட்டவளையில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களினால் கடந்த நாட்களாக முன்னெடுக்க வந்த பணி புறக்கணிப்பு போராட்டம் நிர்வாகம் வழங்கிய உறுதிமொழியைடுத்து முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவத்துள்ளது
கடந்த வருடங்களில் வழங்கியது போன்று இவ் வருடமும் போனஸ் கொடுப்பனவை வழங்கவேண்டுமென வலியுறுத்தியே வட்டவளை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தமக்கு வழமையை போன்று போனஸ் வழங்குவதற்கு நிர்வாகம் மறுப்பு தெரிவித்து சிறிய தொகை ஒன்றை வழங்குவதாக அறித்துள்ளதாகவும் எனவே தமக்கு முழுமையான போனஸ் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தவிசாளரும், எம்.பியுமான மருதபாண்டி ராமேஷ்வரன் ஆகியோரின் ஆலோசனைக்கமைய இ.தொ.கா பிரதிநிதிகள் வட்டவளை ஆடைத்தொழிற்சாலைக்கு செவ்வாய்க்கிழமை (28) சென்று தொழிலாளர்கள் மற்றும் நிர்வாக தரப்பினருடன் அவர்கள் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது சம்பள உயர்வு அவசியம், போனஸ் வழங்கப்பட வேண்டும், தற்போது வழங்கப்படும் உணவு மாற்றப்பட வேண்டும், சில மேற்பார்வையாளர்களின் செயற்பாடுகள் மோசமாக உள்ளன என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தொழிலாளர்கள் முன்வைத்தனர்.
இதற்கு உணவு மாற்றம், மேற்பார்வையாளர் விவகாரம் உள்ளிட்ட விடயங்களுக்கு நிர்வாக தரப்பில் சாதக பதில் வழங்கப்பட்டுள்ளது. போனஸ் தொடர்பில் மேலிடத்தில் கதைத்துவிட்டு அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
அத்துடன், பணி புறக்கணிப்பு போராட்டம் இடம்பெற்ற நாட்களுக்கும் சம்பளம் வழங்குவதற்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏனைய கோரிக்கைகள் தொடர்பில் நிர்வாக தரப்பில் இருந்து கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டு வழமையாக பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிக்கப்படுகின்றது.
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை கவனத்திற் கொண்டு, அரசாங்க ஊழியர்களின் மேலதிக நேரக் கொடுப்பனவுகள் உள்ளிட்ட ஏனைய கொடுப்பனவுகளை மட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கல்வியியல் கல்லூரிகளில் பயின்ற 7800 டிப்ளோமாதாரிகளை அடுத்த மாதம் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று (29) கடமைக்கு சமுகமளிக்காத 20க்கும் மேற்பட்ட இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள், கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான பங்குகளை விற்பனை செய்வதற்கு எதிராக இன்று (27) உண்ணாவிரதம் ஆரம்பித்துள்ளதாக கூட்டுத்தாபனத்தின் சுதந்திர ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை தனியார்மயப்படுத்துவதற்கு எதிராக தொழிற்சங்க ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்படும் பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கிறது.
அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் வரிக்கொள்கைக்கு எதிராக அடுத்த வாரம் முதல் தமது தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்தவுள்ளதாக தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
எரிபொருள் விநியோகம் மற்றும் சேவையை முன்னெடுக்கவிடாமல் இடையூறு விளைவித்த தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்த ஊழியர்களுக்கும் கட்டாய விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக பெற்றோலியக்கூட்டுத்தாபன தலைவர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை நாளை திங்கட்கிழமை (27) ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சமுர்த்தி கொடுப்பனவு, அரச ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியம் என்பன முன்கூட்டியே வழங்கப்படவுள்ளன.