வார இறுதியில் மின் தடை அமுலாகும் விதம் பற்றிய அறிவித்தல்

வார இறுதியில் மின் தடை அமுலாகும் விதம் பற்றிய அறிவித்தல்

இன்றும், நாளையும் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய A B C D E F G H I J K L வலயங்களில் இன்று காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியில் 3 மணித்தியாலமும் 20 நிமிடமும்,

மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியில், ஒரு மணித்தியாலமும் 40 நிமிடமும் மின்துண்டிப்பு அமுலாகவுள்ளது.

P Q R S T U V W வலயங்களில், காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியில் மூன்று மணிநேரமும்,

மாலை 6மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியில், ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின்துண்டிப்பு அமுலாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாளைய தினம் A B C D E F G H I J K L  வலயங்களில் மூன்று மணித்தியாலமும் 30 நிமிடமும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த வலயங்களில் காலை 8.30 முதல் மாலை 5.30  வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலமும் 15 நிமிடமும்,

மாலை 5.30 முதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடமும் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் P Q R S T U V W வலயங்களில் நாளை மாலை 3மணி முதல் இரவு 11 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 2 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கான எரிபொருள் தொடர்பான அறிவித்தல்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் 8.95 மில்லியன் ரூபா இழப்பீடு

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image