அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கான எரிபொருள் தொடர்பான அறிவித்தல்

அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கான எரிபொருள் தொடர்பான அறிவித்தல்

அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் வாகனங்களுக்காக மேலதிக எரிபொருளை கையிருப்பில் வைத்திருக்குமாறு அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்தது.

அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர் முன்கூட்டியே அறிவித்து பின்னர் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
இது தொடர்பில் தமது பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துடன் தொடர்பினை ஏற்படுத்த முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
 
இதனிடையே, மேலும் 20,000 மெட்ரிக் தொன் டீசலை கப்பலில் இருந்து தரையிறக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த டீசல் தொகையை ஏற்றிய கப்பல் சிங்கப்பூரில் இருந்து நாட்டை வந்தடைந்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
 
மேலும் 30,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய கப்பல் எதிர்வரும் திங்கட்கிழமை நாட்டை வந்தடையவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
 
நியூஸ்பெஸ்ட்
 
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image