தமது ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட IMEI இயங்கு சாதனங்களை மட்டுமே கொள்வனவு செய்யுமாறு இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பதிவுசெய்யப்படாத IMEI இயங்கு சாதனங்கள் எதிர்காலத்தில் தொலைதொடர்பு செய்படுத்துநர்களின் வலையமைப்பில் செயல்பட அனுமதிக்கப்பட மாட்டாது.
ஜனவரி மாதம் 28ஆம் திகதிக்கு முன்னர் தொலைத்தொடர்பு செயல்படுத்துநர்களின் வலையமைப்புகளுடன் இணைக்கப்பட்ட IMEI
இயங்கு சாதனங்களுக்கு இந்த நிபந்தனை பொருந்தாது என்றும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆனைக்குழு அறிவித்துள்ளது.
உங்கள் கைத்தொலைபேசி இயங்கு சாதனங்களின் பதிவுத்தன்மை தொடர்பில் அறிந்து கொள்ள IMEI (இடைவெளி) (15 இலக்க IMEI எண்) என ரைப் செய்து 1909 என்ற இலக்கத்திற்கு SMS அனுப்புமாறு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.