பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பான தீர்மானம் நாளைய சந்திப்பில் - ரவி குமுதேஷ்

பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பான தீர்மானம் நாளைய சந்திப்பில் - ரவி குமுதேஷ்

தற்போது முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை (14) சந்திக்கவுள்ளன.

சுகாதார நிபுணத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் இவ்விடயம் கருத்து தெரிவிக்கையில் இன்று நடைபெறவுள்ள நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்ககப்படும் என்று தெரிவித்துள்ளார்.

 வைத்தியசாலைகளில் நோயாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதற்கு நாம் இதுவரை இடமளிக்கவில்லை. சுகாதார நிபுணத்துவ அதிகாரிகள் சங்கம்தான் இதுவரையும் சிகிச்சைக்கான ஒத்துழைப்புக்களை வழங்கி வந்தது. இன்று மாலை எமது விசேட நிறைவெற்றுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. நிறைவேற்றுக்குழுக்கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானம் தொடர்பில் நாளை (14) மகாசபைக் கூட்டத்தில் முன்வைத்து நிறைவேற்ற முயற்சி செய்வோம். இந்த, தீர்மானத்துக்கு இந்தத் தடைக்கு முகங்கொடுப்பதா? முன்னோக்கிச் செல்வதா என்ற தீர்மானத்தை முன்னெடுப்போம். இந்தத் தடையை உடைக்க நாம் முயற்சிப்போம்.

சுகாதாரசேவையை அத்தியவசிய சேவையாக விசேட வர்த்தமானியூடாக நேற்று (13) வௌியிட்டுள்ள நிலையில், சுகாதார தொழிற்சங்கங்கள் 7வது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்து வருகின்றன. கொழும்பு நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கமைய, அரச தாதியர் அதிகாரிகள் சங்கம் தற்காலிகமாக போராட்டதில் இருந்து விலகிக்கொண்டுள்ளது. ஏனைய 17 தொழிற்சங்கங்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

சம்பள முரண்பாட்டை நீக்குதல் உட்பட 7 கோரிக்கைகள் முன்வைத்து 18 தொழிற்சங்கங்கள் இணைந்து இலங்கை முழுவதும் இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

சுகாதார ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டதில் இருந்து விலகிய தொழிற்சங்கம்!

சுகாதாரத்துறை தொழிற்சங்க நடவடிக்கைக்கு நீதிமன்றம் தடை

பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ள அரச சுகாதார ஊழியர்கள்

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image