இலங்கை வரும் அனைத்து பயணிகள் கவனத்திற்கும்

இலங்கை வரும் அனைத்து பயணிகள் கவனத்திற்கும்

நாட்டிற்குள் நுழையும் அனைத்து பயணிகளும் கொவிட் நோய் தொடர்பான அனைத்து தகவல்களும் இணையமைப்படுத்தப்பட்டிருப்பதை உறுதின்லைனில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வௌியிட்டுள்ள புதிய வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, பெற்றுக்கொண்ட தடுப்பூசிகள் தொடர்பான விபரங்கள், புறப்படுவதற்கு முன்னர் கொவிட் தொற்று ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்ட அறிக்கை, கடவுச்சீட்டுத் தகவல்கள் என்பன இணையமயப்படுத்தப்பட்டிருப்பது அவசியம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இப்புதிய நடைமுறை தொடர்பில் சிவில் விமான சேவை அதிகாரசபை பணிப்பாளர் நாயகம், விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் பணிப்பாளர் ஆகியோருக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தௌிவுபடுத்தியுள்ளார்.

அதற்கமைய, நாட்டுக்குள் நுழையும் அனைத்துப் பயணிகளும் அவர்களுடைய சுகாதாரம் தொடர்பான தகவல்களை வருகை நுழைவாயிலில் உள்ள இணையமயப்படுத்தல் வசதியினூடாக பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பயணிகள் தங்கள் குறியீட்டு எண்ணின் அசல் நகலை வைத்திருக்க உடன் வைத்திருப்பது கட்டாயமாகும் அல்லது கையடக்க தொலைபேசியில் பதிவு செய்தி வைத்திருப்பது அவசியம்.

இப்புதிய நடைமுறையானது எதிர்வரும் ஜனவரி மாதம் 2022ம் ஆண்டு ஜனவரி மாதம முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image