பிரியந்தவுக்காக பாகிஸ்தானில் சேகரிக்கப்பட்ட ஒரு இலட்சம் அமெ. டொலர் நிதி

பிரியந்தவுக்காக பாகிஸ்தானில் சேகரிக்கப்பட்ட ஒரு இலட்சம் அமெ. டொலர் நிதி

பாகிஸ்தான் சியல்கோட் நகரில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் நட்டஈடு வழங்கப்படவுள்ளதாகவும் சம்பளப் பணத்தை தொடர்ச்சியாக அவருடைய மனைவிக்கு வழங்கப்படவுள்ளதாகவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

பிரியந்தவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வில் பிரதமர் இம்ரான் கான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து வௌியிட்டுள்ள அவர், இதன் பிறகு மதத்தின் பேரில் வன்முறையில் இறங்கும் யாருக்கும் இனிமேல் மன்னிப்பு வழங்கப்போவதில்லை என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

.பாதிக்கப்பட்ட நபருக்கு நட்டஈடு வழங்குவதற்கு சியல்கோட் நகரில் உள்ள வியாபார சமூம் நிதி சேகரிப்பை ஆரம்பித்துள்ளதாகவும் அந்நிதிக்கு இதுவரை ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்கள் சேகரிக்கப்பட்டுள்ளன பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் பிரியந்தவின் பெற்ற மாதாந்த சம்பளத்தை தொடர்ச்சியாக அவருடைய குடும்பத்திற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

மேலும் இக்கொலையுடன் தொடர்புபட்ட எவரையும் தப்ப விடப்போவதில்லை என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்விரங்கல் நிகழ்வில் பிரியந்த மீது தாக்குதல் நடத்தியபோது அவரை காப்பாாற்ற முயற்சி செய்த பாகிஸ்தானியரான மலிக் அத்னானுக்கு அந்நாட்டு பொது மகன் ஒருவருக்கு வழங்கும் உயரிய விருதான 'தம்கான் அய் சுஜாத்' விருதை பிரதமர் அணிவித்து கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.

Pakistan 1

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image