புலம்பெயர் இலங்கையரை அழைத்து வரும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தம்

புலம்பெயர் இலங்கையரை அழைத்து வரும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தம்

பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தீர்மானித்துள்ளார்.

கொவிட் தடுப்புக்கான தேசிய செயலணியுடனான கலந்துரையாடல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றபோது இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் இருந்து நேற்று இலங்கை வந்த இலங்கையர்கள் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் சுகாதார அதிகாரிகளின் மேற்பார்வையில்ஹோட்டல்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் வீடுகளுக்கு திரும்பிய பின்னரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.

பிரித்தானியாவில் இருந்து இலங்கை வரும் சரக்கு விமான பணியாளர்களும் தனிமைப்படுத்தப்படுவர். நாட்டுக்கு கொரோனா தடுப்பூசியை கொண்டு வருவதன் முக்கியம் குறித்தும் இக்கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது.

அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சீனா போன்ற நாடுகள் தற்போது தடுப்பூசியை தாயரித்துள்ளனர். அந்தந்த நாடுகளின் சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கான இணைப்பாளராக ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரதுங்க நியமிக்கப்பட்டுள்ளனர்.

தடுப்பூசி வழங்கவேண்டியவர்கள் முக்கியத்துவதற்கமைய தீர்மானிக்கப்படுவர். பெருந்தோட்டங்கள், மாடிவீட்டுத் தொகுதி, தங்குமிடங்கள் போன்ற அதிகம் கொரோனா பரவல் ஏற்படக்கூடிய பகுதிகள் குறித்த தரவுகள் சேகரிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சி, ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணாண்டோபுள்ளே, பாராளுமன்ற உறுப்பினர் மதுர வித்தான, ஜனாதிபதி செயலாளர் பி.பி ஜயசுந்தர, ஜனாதிபதியின் விசேட ஆலோசகர் லலித் வீரதுங்க உட்பட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image