கொரிய மொழி பரீட்சையில் 20 வீதமானவர்கள் சித்தி

கொரிய மொழி பரீட்சையில் 20 வீதமானவர்கள் சித்தி

கொரிய மொழித் திறன் பரீட்சையில் கடந்த ஆண்டு (2019) தோற்றியவர்களை விடவும் இவ்வாண்டு (2020) 20 வீதமானவர்கள் சித்தியடைந்துள்ளனர் என்று இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

கொரியாவில் தொழில் வாய்ப்பை நாடி செல்வோர் அந்நாட்டு மொழித் திறன் பரீட்சையில் சித்தியடைந்திருப்பது கட்டாயமாகும். இந்நிலையில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட பரீட்சையில் 464 பேர் சித்தியடைந்துள்னர். இந்த வருடம் 1,338 பேர் பரீட்சைக்கு தோற்றியுள்ளதுடன் 561 பேர் சித்தியடைந்துள்ளனர்.

தென்கொரியாவில் 4 வருடங்களும் 10 மாதங்களும் பணியாற்றுவதற்கு இதனூடாக வாய்ப்பு கிடைக்கிறது. எவ்வித சட்ட விரோத செயற்பாடுகளிலும் ஈடுபடாதவர்களுக்கு மறுபடியும் தொழில் வழங்குவதாக ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாண்டு பரீட்சையில் தோற்றியவர்களுடைய பெறுபேறுகளை www.slbfe.lk என்ற பணிய உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் பார்வையிட முடியும்.

தென்கொரியாவில் சுமார் 25,000 இலங்கையர்கள் பணியாற்றுகின்றனர். கொரோனா தொற்று காரணமாக விமான போக்குவரத்துகள் தடை செய்யப்பட்டதையடுத்து புதிதாக பணிக்காக செல்வோர் எண்ணிக்கை குறைவடைந்துள்ள போதிலும் விடுமுறைக்கு நாடு திரும்பியவர்களில் 300 இற்கும் அதிகமானவர்கள் கட்டம் கட்டமாக மத்தளை விமான நிலையத்தினூடாக தென் கொரியா அனுப்பப்பட்டுள்ளனர் என்று பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image