கத்தாரில் இதுபோன்ற செயல்களுக்கு 10 ஆயிரம் றியால்கள் அபராதம்
கத்தார் வாழ் அனைவருக்கும் நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அனைவரது கடமையாகும். எனவே குப்பை, மற்றும் கழிவுகளை அகற்றும் போது உரிய முறையில் அகற்றும் படியும், தவறும் பட்சத்தில் 10 கத்தார் றியால்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என்பதாக தெரிவித்துள்ளது.
2017ம் ஆண்டு பொதுச் சுகாதார 17ம் இலக்க சட்டத்தின் படி உரிய முறையில் குப்பை மற்றும் கழிவுகளை அகற்றாதவர்கள் மேற்படி 10 ஆயிரம் றியால்கள் வரை அபராதம் விதிக்கப்படுவார்கள் என்பதாக ஞாபகப்படுத்தியுள்ளது.
- பாவித்த முகக் கவசங்களை, டிஸ்யூ காகிதங்களை, பாவித்த வெற்றுப் பெட்டிகளை, வீதிகளில், வீதியோரங்களில் வீசுதல் மற்றும், பொது இடங்களில் துப்புதல், போன்றவைகளும் இந்த தண்டனையின் கீழ் அடங்கும்.
- முறிந்த, அல்லது வெட்டப்பட்ட மரக்கிளைகளை வீதியோரங்களில் வீசுதல் 10 ஆயிரம் றியால்கள் அபராதம் விதிக்கப்படக்கூடிய தண்டனையாகும்.
- குப்பை, மற்றும் கழிவுகள் அடங்கிய உறைகளை பொது இடங்கள், கடைகள், ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு வெளியில் வீசுதலும் 10 ஆயிரம் றியால்கள் அபராதம் விதிக்கப்படவுடிய தண்டனையாகும்.
- பாவித்த தேநீர் கோப்பைகளை (Paper cups)களை கடற்கரைகள், தோட்டங்கள், பூங்காக்கள் போன்ற பகுதிகளில் வீசுதல் 10 ஆயிரம் றியால்கள் அபராதம் விதிக்கப்படவுடிய தண்டனையாகும்.
- கட்டிட நிர்மாண கழிவுப் பொருட்களை உரிய முறையில் அகற்றாமல், அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் வீசாது பொது
இடங்களில் வீசுதலும், 10 ஆயிரம் றியால்கள் அபராதம் விதிக்கப்படவுடிய தண்டனையாகும்.
எனவே பொது மக்கள் அனைவரும் குப்பை, மற்றும் கழிவுகளை அகற்றும் போது அதற்கென ஒதுக்கப்பட்ட உரிய முறைகளில், உரிய கொள்கலன்களில் இட்டு வீட்டையும், நாட்டையும் சுத்தமாக வைத்துக்கொள்ள அழைப்பு விடுத்துள்ளது.
மூலம் - கத்தார் தமிழ்