கொரியாவில் இலங்கை மீனவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை அதிகரிக்க கோரிக்கை

கொரியாவில் இலங்கை மீனவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை அதிகரிக்க கோரிக்கை

கொரியாவின் தொழிற்சந்தையில் இலங்கை மீனவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை அதிகரிப்பதற்கு கவனம் செலுத்துமாறு கொரிய அரசாங்கத்திடம் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் கோரிக்கை


இலங்கை மீனவர்களின் தொழில் வாய்ப்பினை அதிகரித்தல், பயிற்சி வாய்ப்புகளை ஏற்படுத்துதல் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல் என்னும் நோக்கில் கொரியாவின் தொழிற்சந்தையில் இலங்கை மீனவர்களுக்கு தொழில் வாய்ப்பினை அதிகரிப்பது தொடர்பாகக் கவனம் செலுத்துமாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் கொரிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
அமைச்சர் மற்றும் இலங்கையின் கொரிய தூதுவர் மியோன் லீ உடன் நேற்று (30) இடம் பெற்ற விசேட கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் முகாமைத்துவத்திற்காக இரு தரப்பு இணக்கம் மற்றும் ஒத்துழைப்பை மேலும் முன்னேற்றுதல் தொடர்பாகவும் இக்கலந்துரையாடலின் போது ஆர்வம் காட்டப்பட்டது.
இலங்கைக்காக கொரிய நாட்டினால் வழங்கப்படும் தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கள் மற்றும் வலுவான தொடர்புகள் குறித்து அமைச்சர் இதன் போது தமது நன்றிகளைத் தெரிவித்தார்.
அத்துடன் தென் கொரியாவில் சமீபத்தில் நடந்த சோகமான விமான விபத்து குறித்தும் தமது அனுதாபங்களைப் அமைச்சர் பகிர்ந்து கொண்டார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image