ஆயிரம் இளைஞர் யுவதிகளுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு

ஆயிரம் இளைஞர் யுவதிகளுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு

விவசாயத்துறை சார்ந்த வேலைவாய்ப்புகளை இலங்கையர்களுக்கு வழங்க ஜப்பான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, 1000 இளைஞர் யுவதிகளுக்கு இவ்வாய்ப்பு கிடைக்கவுள்ளது.

கடந்த 15ம் திகதி ஜப்பானுக்கான இலங்கை தூதுவர் சஞ்சித் குணசேக்கரவின் வழிகாட்டலில் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் எதிர்வரும் இரு வாரங்களுக்குள் கைச்சாத்திடப்படவுள்ளது என்று தூதுவருடனான Zoom ஊடான இடம்பெற்ற கலந்துரையாடலில் கூறியுள்ளார்.

இவ்வேலைவாய்ப்பிற்கு தெரிவு செய்யப்படும் இளைஞர் யுவதிகள் இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துடன் இணைந்து தேவையான மொழிப்பயிற்சி உட்பட பயிற்சிகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image