ஜனவரி முதலாம் திகதி முதல் பாரிய தொழிற்சங்க நடவடிக்கை! - GMOA எச்சரிக்கை
சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைத் தீர்ப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்படுமாயின், ஜனவரி முதலாம் திகதி முதல், பாரிய தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
எதிர்வரும் 27ஆம் திகதி இடம்பெறவுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழுவில் இது தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.