முறைசாரா துறை தொழிலாளர்களுக்கான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கலந்துரையாடல்
கரு சரு' நிகழ்ச்சித் திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
முறைசாரா துறை தொழிலாளர்களுக்கு கண்ணியம் மற்றும் பாதுகாப்பு வழங்குவதற்கு தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் தொழில் வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள 'கரு சரு' நிகழ்ச்சித் திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மற்றும் தொழில் சபையை ஸ்தாபிப்பதற்கான முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (20) அமைச்சர் மனஷ நாணயக்கார தலைமையில் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில், அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் மனிதவள மற்றும் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதன்படி, அடுத்த வருடத்தில் உள்வாங்கப்படவுள்ள தொழில் பிரிவுகள் மற்றும் முறைசாரா துறையில் உள்ள தொழில் வல்லுநர்களை ஈடுபடுத்தும் வகையில் மாவட்ட மட்டத்தில் அமர்வுகளை நடத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.