EPF , ETF நிதிங்கள் மீதான வரி - திருத்தங்கள் செய்யவேண்டியது பாராளுமன்றமே!

EPF , ETF நிதிங்கள் மீதான வரி - திருத்தங்கள் செய்யவேண்டியது பாராளுமன்றமே!

தொழிலாளர் அமைச்சின் ஆட்சேபனைகளுக்கு மத்தியில், ஊழியர்களின் ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) ஆகியவற்றை முதலீடு செய்யப்படுவதனூடாக பெறப்படும் இலாபத்திற்கு விதிக்கப்பட்டு வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் திருத்தங்களை மேற்கொள்ளவது அவசியமா இல்லையா என்பது குறித்து பாராளுமன்றில் தீர்மானிக்க வேண்டும் என்று தொழில் அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விடயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஏற்கனவே வௌியிடப்பட்டுள்ளமையினால் அவ்வர்த்தமானி அறிவித்தலில் மாற்றங்கள் கொண்டுவருவது பாராளுமன்றின் பொறுப்பிலேயே உள்ளது என்று திரைசேரிச் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

 “வரி விதிப்பை யார் ​வேண்டுமானாலும் எதிர்க்கலாம். எனினும் தீர்மானத்தை பாராளுமன்றமே எடுக்க வேண்டும். . இது இப்போது வர்த்தமானி, எனவே கொள்கை வகுப்பாளர்கள் இங்கிருந்து எவ்வாறு தொடர வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும். அது தற்போது வர்த்தமானியாக வெளியிடப்பட்டுள்ளது, அதன்படி காரியங்கள் நடைமுறைப்படுத்தப்படும்” என்றார்.

ஏற்கனவே தாயரிக்கப்பட்ட சட்டத்திற்கமைவாக EPF மற்றும் ETF ஏற்கனவே வரி அறவிடப்பட்டுள்ளது. வட்டி வழங்கப்பட்ட பின்னர் தான் வரி விதிக்கப்படும். அது குறைக்கப்படக்கூடிய செலவாகும். எவ்வாறு இருப்பினும் EPF இற்கு விதிக்க்ப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டு சட்டத்தின் கீழ் EPF மற்றும் ETF ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வார ஆரம்பத்தில் தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா பாராளுமன்றில் தேசிய வருமான திணைக்களத்தினூடாக புதிய வரி சட்டம் தயாரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததுடன் தற்போதைய பிரச்சினை விளக்கப்படுத்தலில் உள்ள பிரச்சினையே தவிர வர்த்தமானி அறிவித்தலில் அல்ல என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய வருமான திணைக்களம் வரவுசெலவுக்கு முன்னரே விளக்கமொன்று தெரிவித்துள்ளதுடன் அதில் குறித்த சட்டத்திற்கமைய EPF மற்றும் ETF முதலீடுகளினூடாக பெறப்படும் நிதி வருமானம் என்பதனால் அதற்கு வரி விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அந்த விளக்கம் தவறானது என்று நாம் திரைசேரிக்கு நீண்ட நாட்களுக்கு முன்னரே எமது எதிர்ப்பை தெரிவித்துள்ளோம். அதற்கு நாம் பொறுப்பேற்க மாட்டோம். அவர்களின் விளக்கம் தவறானது. அதுதான் எமது நிலைப்பாடு என்றும் அமைச்சர் தெரிவித்தள்ளார்.

100 கோடி ரூபாவுக்கு அதிகமான வருமானம் உள்ள நிறுவனம் மற்றும் தனிநபரிடமிருந்து 25 வீத நிதியை 2 பில்லியன் ரூபா அறவிடுவது தொடர்பான மேலதிக வரிச் சட்டம் கடந்த 7ம் திகதி திங்கட் கிழமை வௌியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்திகள்

ETF, EPF நிதியத்துக்கு வரி செலுத்துவது சாத்தியமில்லை - தொழில் அமைச்சர்

EPF உட்பட நிதியங்களுக்கு 25 வீத வரி - கடுமையாக எதிர்க்கும் ஊழியர் மத்திய நிலையம்

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image