ஓய்வுபெறும் வயதை 60 ஆக நீடிக்கும் சட்டதிட்டங்களை தயாரிக்க குழு நியமனம்

ஓய்வுபெறும் வயதை 60 ஆக நீடிக்கும் சட்டதிட்டங்களை தயாரிக்க குழு நியமனம்

தனியார்துறை ஊழியர்களது ஓய்வு பெறும் வயதை 60 ஆக நீடிப்பதற்கு அவசியமான சட்டதிட்டங்களை உருவாக்குவதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

தொழில் ஆணையாளர் தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஒரு வார காலத்திற்குள் முதலாளிமார் சங்கம் மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் இவ்விடயம் தொடர்பில் தீர்மானத்திற்கு வரவேண்டும். தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையின் முன் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது தொடர்பில் கலந்துரையாடினேன். அப்போது ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கு தொழிற்சங்க தலைவர்கள் இணங்கினர் என இவ்விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

எனினும் சில ஊழியர்கள் 55 வயதில் ஓய்வு பெற விரும்பினால் அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். ஊழியர் நம்பிக்கை நிதியை பெற்றுக்கொள்ளவதற்கான உரிமையை வழங்க வேண்டும் என்றும் சேமலாப நிதியத்தை பிறகு பெற்றுக்கொள்வதற்கு எவ்வித எதிர்ப்பும் இல்லையென்றும் அவர்கள் தெரிவித்தனர் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்..

இது தொடர்பில் முதலாளிமார் சங்கம் கருத்து தெரிவிக்கையில், கொள்கை ரீதியாக இவ்விடயத்திற்கு எவ்வித எதிர்ப்பும் இல்லையனெ்றாலும் சட்டரீதியாக அழுத்தங்கள் வழங்கப்படுமாயின் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கவேண்டிவரும் என்று தெரிவித்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் அதன் நன்மை தொடர்பில் பல பிரச்சினைகள் ஏற்படும் என்று அவர்கள் சுட்டிக்காட்டிய அமைச்சர், சுகயீனமுற்றவர்களை 60 வயது வரை பணியாற்றுமாறு பலவந்தப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image