வவுனியா வைத்தியசாலை வைத்தியர்கள் உட்பட 23 தனிமைப்படுத்தப்பட்டனர்!

வவுனியா வைத்தியசாலை வைத்தியர்கள் உட்பட 23 தனிமைப்படுத்தப்பட்டனர்!

வவுனியா பொது வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவு வைத்தியர்கள் ஐவர் உட்பட ஊழியர்கள் குழாம் இன்று (27) முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று வவுனியா சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

வவுனியா, உளுக்குளம் கிராமத்தில் பெண்ணொருவர் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி உயிரிழந்ததையடுத்து அவர் சிகிச்சை பெற்ற வைத்தியசாலை வைத்தியர்கள் உட்பட ஊழியர்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சத்திரசிகிச்சை நிபுணர் உட்பட ஐந்து வைத்தியர்கள், தாதியர் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் 18 பேர் உட்பட 23 பேர் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, உயிரிழந்த பெண் வசித்த உளுக்குளம் கிராமத்தின் ஒரு பகுதி மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்று வவுனியா தெற்கு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயம் தெரிவித்துள்ளது.

நோய்வாய்ப்பட்ட நிலையில் உளுக்குளம் பிரதேசத்தை சேர்ந்த 62 வயது பெண் கடந்த 20ம் திகதி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுகயீனம் அதிகமானதையடுத்து அவர் வவுனியா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது எனவும் அதன் பின்னர் செய்யப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image