வேலைத்தளங்களில் தொழிற்பயிற்சி பெறும் மாணவர்களுக்கான பாதுகாப்பு அங்கி

வேலைத்தளங்களில் தொழிற்பயிற்சி பெறும் மாணவர்களுக்கான பாதுகாப்பு அங்கி

வேலைத்தளங்களில் தொழிற்பயிற்சி பெறும் மாணவர்களுக்கான பாதுகாப்பு அங்கி (Overall Kit) வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதிக கேள்வியுடைய துறைகளுக்கு முன்னுரிமை வழங்கி வருடாந்தம் உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 100,000 இலிருந்து 200,000 வரை அதிகரிப்பதன் மூலம் தொழிற்கல்வித் துறையை விரிவாக்குவதற்காக 2021 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடத்தக்களவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போது திறன்விருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சிகள் மற்றும் புத்தாக்கங்கள் இராஜாங்க அமைச்சின் கீழ் இயங்கும் வேலைத்தளங்கள் (Workshop) மற்றும் நிர்மாணத்துறை சார்ந்த பயிற்சிகளை வழங்குவதற்காக 09 நிறுவனங்கள் இயங்குகின்றன. குறித்த நிறுவனங்களின் கீழ் தற்போது கிட்டத்தட்ட 30,000 பேர் பயிற்சிகளைப் பெறுவதுடன், 2021 ஆம் ஆண்டில் ஆட்சேர்ப்பில் 40,000 பேர் வரை எதிர்பார்க்கப்படுகின்றது.

இப்பயிற்சிகளின் போது பயிலுனர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், சம்பிரதாய தொழிலாளருக்கு அப்பால் மிகவும் நவீன தொழில் வல்லுனராக குறித்த பயிற்சியில் ஈடுபடும் வகையில் பயிலுனர்களுக்கு பாதுகாப்பு அங்கி வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, 2021 ஜனவரி மாதம் தொடக்கம் தொழிற்கல்வி நிறுவனங்களுக்கு உள்வாங்கப்படும், வேலைத்தளங்களில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கான பாதுகாப்பு அங்கியை வழங்குவதற்கும், குறித்த பாதுகாப்பு அங்கி இலங்கை இராணுவத்தின் 'ரணவிரு அப்பரல் நிறுவனத்திற்கு' வழங்கி தயாரித்துக் கொள்வதற்கும் கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image