​தொற்று அபாயம் அதிகமுள்ள 3 மாவட்டங்கள்

​தொற்று அபாயம் அதிகமுள்ள 3 மாவட்டங்கள்

கொழும்பு, கம்பஹா மற்றும் குருணாகலை ஆகிய மாவட்டங்கள் கொவிட் அபாய வலயங்களாக அடையாளங்காணப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த மாவட்டங்களில் நாளாந்தம் அடையாளங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர், தற்போது நாட்டில் காணப்படும் நிலைமை மிகவும் அவதானத்துக்குரியது. மேல் மாகாணத்திலும் வட மேல் மாகாணத்திலும் நாட்டில் வேறு சில பிரதேசங்களிலும் கொரோனா கொத்தணிகள் உருவாகி வருகின்றன. பொது மக்கள் இவ்வார இறுதி நாட்களில் மிகவும் கவனத்துடனும் பொறுப்புடனும் செயற்படவேண்டும். ஓரளவுக்காவது போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என நாம் எதிர்பார்த்தோம். எனினும் அவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படுவதாக இதுவரை தெரியவில்லை. இந்நிலைமையில் மக்கள் சுகாதார மற்றும் உயிர் பாதுகாப்பு குறித்த பொறுப்பு நூறு வீதமான பொறுப்பு பொது மக்களை சார்ந்ததுள்ளது.

இந்நிலையில் இஸ்லாமிய சகோதரர்கள் புனித றமழான் நோன்பு நோற்பதால் அதற்கான வழிகாட்டல் தற்போது வௌியிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு சமயத் தலைவர்களிடம் நாம் வேண்டுகோள் விடுக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தற்போது நாட்டில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை நெருங்கியுள்ளது. நேற்று மட்டும் இலங்கையில் 969 புதிய தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்னர் என தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அவர்களில் 38 பேர் வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image