கொவிட் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருங்கள்- டொக்டர் சுதத் சமரவீர

கொவிட் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருங்கள்- டொக்டர் சுதத் சமரவீர

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளமையினால் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதார அமைச்சின் சிரேஷ்ட தொற்று நோயியலாளர் டொக்டர் சுதத் சமரவீர பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அண்மைய தினங்களில் நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையை நாம் காணக்கூடியதாக இருந்தது. இதற்கு காரணம் குருணாகலை பிரதேசத்தில் அமைந்துள்ள மூன்று ஆடைத் தொழிற்சாலைகளில் ஏற்பட்ட கொத்தணியே ஆகும். எதிர்வரும் நாட்களில் நாம் மேலும் பல கொவிட் 19 தொற்றாளர்கள் அதிகரிப்பர் என எதிர்பார்க்கிறோம். சிங்கள தமிழ் புத்தாண்டு பண்டிகைக்காலப்பகுதியில் நாம் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் பொறுப்புடன் செயற்பாடமையே இதற்கு பிரதான காரணம்.

தொற்றாளர்கள் அடையாளங்காணப்படும் வரையில் அவர்கள் தொடர்ச்சியாக அவர்களுடைய அன்றாட செயற்பாடுகளை முன்னெடுப்பார்கள். பயணம் செல்வார்கள். இதனால் எதிர்பாராத வகையில் எமக்கு தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இப்படியான சூழ்நிலையில் நீங்கள் தொற்றாளர்களாகாதிருப்பதற்கும் காவிகளாக செயற்பட்டு குடும்பத்தினருக்கு தொற்றை ஏற்படுத்தாமல் இருப்பதற்கும் பாரிய ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.

மக்கள் ஒன்றுகூடும் எந்தவொரு நிகழ்வுகள், கொண்டாட்டங்கள் ஒன்று கூடல்களை முன்னெடுப்பது தவிர்க்கப்படவேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image