பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனத்தை 1,000 ரூபாவாக அதிகரிக்க இரண்டு பொறிமுறைகள்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கான இரண்டு பொறிமுறைகளை பெருந்தோட்ட நிறுவனங்கள் முன்வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன,

 இதன்படி முதலாவதாக தற்போது இருக்கின்ற 700 ரூபா என்ற அடிப்படை வேதனத்துடன் ஊழியர்சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றை சேர்த்து 105 ரூபாவும், வினைத்திறன் கொடுப்பனவாக 75 ரூபாவாகவும் வரவுக்கான கொடுப்பனவாக 70 ரூபாவும் மற்றும் மேலதிக கொழுந்து பறிப்புக்கான கொடுப்பனவாக 75 ரூபா வீதமும் வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

அதேபோன்று இரண்டாவது முறையாக கலப்புப் பொறிமுறை ஒன்று பெருந்தோட்ட நிறுவனங்களால் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன்படி மூன்று தினங்களுக்கு அடிப்படை வேதன முறையின் கீழும் மூன்று தினங்களுக்கு வினைத்திறன் அடிப்படையான கொடுப்பனவின் கீழும் வேதனத்தை வழங்குவது குறித்த யோசனைமுன்வைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த யோசனைகள் சம்பந்தமாக இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை

எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதி இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என இந்தபேச்சுவார்த்தையில் கலந்து கொள்கின்ற தரப்பினர் தெரிவித்தனர்.

அதேநேரம் எதிர்வரும் 31ஆம் திகதி இது தொடர்பான காணொளி ஊடான பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.

மூலம் : சூரியன் எப் எம் செய்திகள்

 

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image