தொழில்சார் உரிமைகளை முடக்குவது, தொழிற்சங்கங்களை நசுக்குவது புதிய அரசாங்கத்தின் கொள்கை அல்ல

தொழில்சார் உரிமைகளை முடக்குவது, தொழிற்சங்கங்களை நசுக்குவது புதிய அரசாங்கத்தின் கொள்கை அல்ல

தொழில்சார்  உரிமைகளை முடக்குவது  அல்லது தொழிற்சங்கங்களை நசுக்குவது புதிய அரசாங்கத்தின் கொள்கை அல்ல.

 

அனைத்து தொழில்களின் தொழில் கௌரவத்தை  பாதுகாத்து தொழிற்சங்கங்களின் நியாயமான கோரிக்கைகளை முடிந்தவரை நிறைவேற்றுவதற்கு தமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

சுகாதார  அமைச்சர் தனது கடமைகளை பொறுப்பேற்ற பின்னர்  சுகாதார சேவையில் உள்ள  தொழிற்சங்கங்களுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல் தொடர்பில்  சுகாதார அமைச்சு   வெள்ளிக்கிழமை (06)  வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

குறித்த  கலந்துரையாடலின் போது  சுகாதார துறையில் கடமையாற்றும் ஊழியர்கள் எதிர்நோக்கும் தொழில்சார் பிரச்சினைகள் ,  சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்கான தொழிற்சங்கங்களின் கருத்துக்கள், ஆலோசனைகள் மற்றும் பங்களிப்பு ஆகியவை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. 

இதில் அரச வைத்தியர் சங்கங்கள், தாதியர் சங்கங்கள்,  நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்கள் ஒன்றியம் உள்ளிட்ட  சுகாதாரத் துறையில் உள்ள பல முக்கிய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் மேற்படி தொடர் விசேட கலந்துரையாடலில் கலந்துக் கொண்டுள்ளனர்.

இதன் போது சுகாதார  அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,

இதன்போது தொழிற்சங்கப் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட பெரும்பாலான பிரச்சினைகள் மற்றும் முன்மொழிவுகள் மிகவும் நியாயமானவை எனத் தெரிவித்த  சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர், குறித்தப் பிரச்சினைகளுக்கு முறையான நியாயமான தீர்வுகளை வெகு விரைவில் வழங்குவேன் .  

சுகாதார சேவையில் பணியாற்றும் விசேட வைத்திய நிபுணர்கள் முதல்  அடிமட்ட  ஊழியர்கள் வரையான அனைவரும்  சேவைக்கு அப்பாற்பட்ட மனிதாபிமானப் பணியை மேற்கொள்வதாகவும்,  அச்சேவையின் காரணமாகவே இலங்கையின் சுகாதாரத்துறை எதிர்பார்த்த இலக்குகளை அடைய முடிந்துள்ளது.

இலங்கை மக்களுக்கு தரமான மற்றும் உகந்த சுகாதார சேவையை வழங்க எதிர்பார்க்கும்  தற்போதைய அரசாங்கத்தின் புதிய வேலைத்திட்டத்திற்கு  தொழிற்சங்கங்களின் ஆதரவு அத்தியவசியமானது.  

தற்போதைய தொழில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது மாத்திரமன்றி சுகாதார அமைச்சுக்கு தொழிற்சங்கங்களுக்கும்  இடையிலான  உறவு, நல்லிணக்கம் மற்றும் நட்புறவை வளர்ப்பது போன்ற நோக்கங்களும் இவ்வாறான கலந்துரையாடல்களை நடாத்துவதற்கு முக்கிய காரணம். தொழில்சார்  உரிமைகளை முடக்குவது  அல்லது தொழிற்சங்கங்களை நசுக்குவது புதிய அரசாங்கத்தின் கொள்கை அல்ல . 

 அனைத்து தொழில்களின் தொழில் கௌரவத்தை  பாதுகாத்து தொழிற்சங்கங்களின் நியாயமான கோரிக்கைகளை முடிந்தவரை நிறைவேற்றுவதற்கு தமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது என்றார். 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image