தேசிய தொழிலாளர் ஆலோசனைக் சபையின் (NLAC) அடுத்த கூட்டம் அடுத்த மாதம் நடைபெறும் என்று தொழிலாளர் அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தொழிலாளர் அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோவிடம் கருத்து கேட்கப்பட்டபோது, தான் புதிதாக பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சந்திப்பின் திகதியை தற்போது கூறுவது மிக முன்கூட்டியதாகும் என்று கூறினார்.
முந்தைய ஆட்சிக் காலத்தில், ஒரு குறிப்பிட்ட தொழிற்சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு எதிராக கவலைகள் எழுப்பப்பட்ட நிலையில், கீழ் Nடுயுஊ பல பின்னடைவுகளைச் சந்தித்தது.
இதனால் கடந்த ஆண்டு நடத்த வேண்டிய கூட்டங்கள் பல நடைபெறவில்லை என தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று கூட்டு தொழிற்சங்கங்கள் கோரி வருகின்றன. இது தொடர்பாக இந்த சங்கங்கள் இம்மாத இறுதியில் கூடி புதிய அரசாங்கத்துடன் அவர்களின் அணுகுமுறை குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளது.
இதற்கிடையில், முந்தைய நிர்வாகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்கள் தொழிற்சங்கங்களால் உச்ச நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
ஒரு கூட்டு தொழிற்சங்கக் குழுவானது, புதிய வேலைவாய்ப்புச் சட்டங்கள் மீதான பொருளாதார மாற்றக் குழு மசோதா அரசியலமைப்பை மீறுவதாகக் கூறி, அதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுடன் உரிய ஆலோசனையின்றி சட்டமூலம் தயாரிக்கப்பட்ட விதம் குறித்து தொழிற்சங்கங்கள் கேள்வி எழுப்புகின்றன.
தொழிலாளர்களின் பணிச்சூழலில் கடுமையான வேறுபாட்டை ஏற்படுத்தும் தொழிலாளர் சட்டங்களில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தொழிற்சங்கங்கள் தொடர்ந்து கவலைகளை எழுப்பியுள்ளன.
மூலம் - தி சண்டே ரைம்ஸ்