உக்ரைனின் SkyUp விமான சேவைகள் ஆரம்பம்

உக்ரைனின் SkyUp விமான சேவைகள் ஆரம்பம்

உக்ரைனின் SkyUp விமான நிறுவனத்தினால் இலங்கைக்கான விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன் முதலாவது விமானம் நேற்று முன்தினம் (21) பிற்பகல் நாட்டை வந்தடைந்தது.

SkyUp விமான நிறுவனத்திற்கு சொந்தமான U5-9394 இலக்க விமானம் எஸ்டோனிய தலைநகரில் இருந்து மத்தளை சர்வதேச விமான நிலையத்தை நேற்று முன்தினம் (21) பிற்பகல் வந்தடைந்தது.

இதில் 174 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

சுற்றுலாப் பயணிகளை வரவேற்பதற்காக விமான நிலையத்தில் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எதிர்காலத்தில் எஸ்டோனியா, லித்துவேனியா, லட்வியா, போலந்து, மல்தோவா ஆகிய 05 நாடுகளில் இருந்து மத்தளை சர்வதேச விமான நிலையத்திற்கு பயணங்களை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image