அரசாங்கத்திற்கு சொந்தமான பெருந்தோட்ட நிறுவனங்களுடன் விசேட கலந்துரையாடல்!

அரசாங்கத்திற்கு சொந்தமான பெருந்தோட்ட நிறுவனங்களுடன் விசேட கலந்துரையாடல்!
பெருந்தோட்ட அமைச்சின் கீழ் உள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான பெருந்தோட்டங்கள் சார்ந்த நிறுவனங்களின் தற்போதைய நிலைமை தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று முன்தினம் (05) இடம்பெற்றிருந்தது. 
 
பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. 
 
இந்த கலந்துரையாடலில், அவ்நிறுவனங்களின் நிலையை மேம்படுத்தி தேசிய பொருளாதாரத்திற்கு அதிக பங்களிப்பு செய்தல், திறமையான அரச சேவையின் மூலம் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுதல் மற்றும் பாதீட்டு முன்மொழிவுகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. 
 
இதன் போது பொருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் திரு K. V சமந்த விதயாரத்ன, பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், அமைச்சின் செயலாளர் மற்றும் பெருந்ததோட்டங்கள் சார்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image