அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு தொடர்பான அறிவித்தல்

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு தொடர்பான அறிவித்தல்

இறுதி காலாண்டில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.


செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு எதிர்பார்த்த இலக்குகளை எட்டினால், அதன் நன்மைகள் பொதுமக்களுக்கு கிடைக்கும் என தெரிவித்தார்.

இதையும் வாசியுங்கள் 5 வருடங்கள் அனுமதிப்பத்திரம் இன்றேல் வாகனங்கள் கறுப்புப் பட்டியலில்

பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு: பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவித்தல்

அதிபர் சேவை ஆட்சேரப்புக்கான நேர்முகத்தேர்வு அறிவித்தல்

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம் தொடர்பில் அரசாங்கம் உயர்நீதிமன்றில் வழங்கிய வாக்குறுதி

“நாம் தற்போது வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுள்ளோம். அதன் மூலம் இந்நாட்டு மக்களுக்கு நன்மை கிடைத்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் மறுசீரமைக்கப்பட்ட பின்னர் அரசாங்க ஊழியர்களுக்கு இறுதி காலாண்டில் சம்பள உயர்வை வழங்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளார். அதனால்தான் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அரசாங்கம் எதிர்ப்பார்க்கும் இலக்கை எட்ட முடியுமானால் அரச ஊழியர்களுக்கும் அதன் நன்மைகள் கிடைக்கும். என்றார்.

மூலம் - அததெரண

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image