பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு: பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவித்தல்

பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு: பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவித்தல்

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலைத்தேய சங்கீதம் மற்றும் ஹிந்தி பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக திணைக்களம் கூறியுள்ளது.

மேலும் செய்திகள் அதிபர் சேவை ஆட்சேரப்புக்கான நேர்முகத்தேர்வு அறிவித்தல்

அரச உத்தியோகத்தர்களுக்காக வெளியிடப்பட உள்ள சுற்றறிக்கை

மேலும் 08 பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் இன்று (08) ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

குறித்த விடைத்தாள்கள், வௌி மாகாணங்களில் அமைந்துள்ள 10 மத்திய நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை விரைவில் நிறைவு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை முதல் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் இணைவதற்கு தீர்மானித்ததாக பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்மேளனம் தெரிவித்திருந்தது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்மேளனம், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுமார் 02 மாதங்களுக்கு அதிக காலம், விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபடாமல் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம் - நியூஸ்பெஸ்ட் 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image