அதிபர் சேவை ஆட்சேரப்புக்கான நேர்முகத்தேர்வு அறிவித்தல்

அதிபர் சேவை ஆட்சேரப்புக்கான நேர்முகத்தேர்வு அறிவித்தல்

இலங்கை அதிபர் ​சேவை தரம் III க்கான ஆட்சேர்ப்புக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019.02.10 அன்று நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்களின் பெயர்ப்பட்டியல் கீழே உள்ள இணைப்பில்

விண்ணப்பதாரர்களின் பெயர்ப்பட்டியல்

குறித்த பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கான நேர்முகத்தேர்வு எதிர்வரும் 22ஆம் திகதி முதல் ஜூலை முதலாம் திகதி வரை கல்வி அமைச்சில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள் விடைத்தாள் மதிப்பீடு: பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிவித்தல்

அரச உத்தியோகத்தர்களுக்காக வெளியிடப்பட உள்ள சுற்றறிக்கை

அதிபர் சேவையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண கல்வி அமைச்சரின் நடவடிக்கை

இலக்கம் 1885/31 மற்றும் 22.10.2014 ஆம் திகதிய புதிய அதிபர் சேவை பிரமாணக்குறிப்பின் பிரகாரம் 2018/2019 மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த விண்ணப்பதாரர்களுள் இலங்கை அதிபர் சேவை – தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்தல் – இரண்டாம் கட்டம் (2023)

நடவடிக்கைகள் சமரசமாக தீர்த்துக் கொள்ளவது தொடர்பான 12.12.2022 திகதிய சமரச வழக்குத் தீர்ப்பின்படி 10.02.2019 அன்று நடைபெற்ற வரையறுக்கப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த விண்ணப்பதாரிகளுள் இலங்கை அதிபர் சேவையில் 2021.06.30ஆம் திகதிக்கு நிலவும் 4718 ஒன்று திரண்ட வெற்றிடங்களை நிரப்ப வேண்டி இலங்கை அதிபர் சேவையின் சேவை பிரமாணக்குறிப்பின் பிரகாரம் இலங்கை அதிபர் சேவையின் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான பொது மற்றும் கட்டமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வுகளுக்கு அழைக்கப்படுகின்றார்கள்.

  1. அந் நேர்முகத் தேர்வுப் பரீட்சைகள் 2023 மே மாதம் 22 ஆம் திகதி முதல் ஜூன் 01 ஆம் திகதி வரை பத்தரமுல்லை, இசுருபாய, கல்வி அமைச்சின் 4 ஆம் மாடியில் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில் நடைபெறும். அதற்காக, 10.02.2019 அன்று நடைபெற்ற வரையறுக்கப்பட்ட போட்டிப் பரீட்சைக்கு தோற்றி அதில் சித்தியடைந்த விண்ணப்பதாரர்களுள் குறித்த நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுகின்ற விண்ணப்பதாரர்களினது பெயர்ப்பட்டியல் அடங்கிய உப ஆவணமானது அமைச்சின் இணையதளத்தில் (றறற.அழந.பழஎ.டம) வெளியிடப்பட்டுள்ளது.
  2. மேலும், அதில் காட்டப்பட்டுள்ள http://recruitment.moe.lk என்ற இணைய இணைப்பிற்குச் சென்று, உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை குறிப்பிட்டு, அதன் பின்னர் உங்களின் தனிப்பட்ட மற்றும் உத்தியோகபூர்வ தகவல்களை பதிவு செய்ய வேண்டியதோடு தாங்கள் குறித்த திகதியில் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்வீர்கள் எனும் உறுதிப்பாட்டை 2023.05.19 ஆம் திகதிக்கு முன்னர் கட்டாயமாக அதில் குறிப்பிடுதல் வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவும். நேர்முகத் தேர்விற்கான அழைப்புக் கடிதம் மற்றும் அது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட வேண்டிய வலயக் கல்விப் பணிப்பாளரின் அறிக்கையின் மாதிரிப் படிவம் உரிய விண்ணப்பதாரரது தனிப்பட்ட முகவரிக்கு பதிவுத்தபாலில் அனுப்பி வைக்கப்படும்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image