அரச அதிகாரிகளுக்கான எரிபொருள் கொடுப்பனவில் வரையறை

அரச அதிகாரிகளுக்கான எரிபொருள் கொடுப்பனவில் வரையறை
தற்போதைய நிலைமையின் கீழ் கொள்வனவு செய்யக்கூடிய எரிபொருள் லீற்றர் அளவுக்குமைய அரச அதிகாரிகளுக்கான எரிபொருள் கொடுப்பனவை மட்டுப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
 
அனைத்து சேவைகளிலும் முதலாம் தர அதிகாரிகளுக்கு 225 லீற்றர் என்ற உச்சபட்ச அளவிலும் மற்றும் 115 லீற்றர் என்ற குறைந்தபட்ச அளவிலும் எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்பட்டாலும் QR குறியீட்டு முறைமைக்கு அமைய ஒவ்வொரு அதிகாரியும் மாதத்திற்கு உச்சபட்ச அளவில் பெற்றுக் கொள்ளக்கூடிய எரிபொருள் அளவு 80 லீற்றராகும்.
 
இதன்படி 225 லீற்றர் என்ற உச்சபட்ச கொள்வனவுக்கான உரித்துடைய மற்றும் 115 லீற்றர் என்ற குறைந்தபட்ச எரிபொருள்  கொள்வனவுக்கு உரித்துடைய அதிகாரிகள் பெற்றுக் கொள்ளக்கூடிய  எரிபொருளுக்கான கொடுப்பனவு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து தீவிர அவதானம் செலுத்தினால், அரசாங்கத்திற்கு பாரியளவான பணத்தை மீதப்படுத்த முடியும் என கருத்து வெளியிட்ட அரசு உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
 
உச்சபற்ற மற்றும் குறைந்தபட்ச எரிபொருள் லீற்றர் அளவை கருத்திற்கொண்டால், அதிகாரி ஒருவர் அண்ணளவாக 100 லீற்றருக்கான கொடுப்பனவைப் பெறுவார் என்று கருத்தினால், அரசாங்கம் வருடத்திற்கு 4,800 கோடி ரூபாவை செலவிட வேண்டி ஏற்படுமென அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image