ஆசிரியர்களை சேவைக்கு இணைக்கும்போது வழங்க வேண்டிய பயிற்சி

ஆசிரியர்களை சேவைக்கு இணைக்கும்போது வழங்க வேண்டிய பயிற்சி

 ஆசிரியர்களை சேவைக்கு இணைத்துக் கொள்ளும் போது சிறுவர் உளவியல் தொடர்பாக பயிற்சி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டின் ஆய்வில் 61.9% ஆசிரியர்கள் கடந்த காலத்தில் ஒரு முறையாவது உடல் ரீதியான தண்டனையை பயன்படுத்தி உள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது.

80.4% குழந்தைகள் உடல் ரீதியான தண்டனையை அனுபவித்துள்ளனர் என்றும் 53.2% மானோர் உடல்ரீதியான துஷ்பிரயோகத்தை அனுபவித்துள்ளதாகவும் 73.5% மானோர் உளவியல் ரீதியான துஷ்பிரயோகத்தை அனுபவித்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

சிறுவர் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அமைப்புகள் மேற்கொண்ட ஆய்விலேயே இவை கண்டறியப்பட்டுள்ளன.

இதன் காரணமாக அரச உத்தியோகத்தர்களை ஆசிரியர்களாக ஆட்சேர்ப்பு செய்யும் போது சிறுவர் உளவியல் பயிற்சியை கல்வி அமைச்சு கட்டாயமாக வேண்டும் என 14 அமைப்புகள் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளன.

இது தொடர்பாக சிறுவர் பாதுகாப்பு கூட்டமைப்பினர் கல்வி அமைச்சருக்கு அனுப்பி உள்ள கடிதத்திலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்தி நாட்டில் எவ்வாறான மாற்றம் ஏற்பட வேண்டும்? ஜனாதிபதி விளக்கம்

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image