வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவின் சில சேவைகள் மறு அறிவித்தல்வரை இடைநிறுத்தம்

வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவின் சில சேவைகள் மறு அறிவித்தல்வரை இடைநிறுத்தம்

வெளிவிவகார அமைச்சின் தூதுரக சேவைப் பிரிவின் கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக, சரிபார்ப்பு மற்றும் சான்றளிப்பு பிரிவுகளின் சேவைகள் மறு அறிவித்தல்வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் இதனை அறிவித்துள்ளது.

கொன்சியூலர் விவகாரப் பிரிவின் கணினி அமைப்பு செயலிழப்பு

கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள செயலிழப்பு காரணமாக, கொழும்பு 01 இல் அமைந்துள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவு மற்றும் அதன் யாழ்ப்பாணம், திருகோணமலை, மாத்தறை, கண்டி,  குருநாகல் ஆகிய பிராந்திய அலுவலகங்களின் சரிபார்ப்பு மற்றும் சான்றளிப்புப் பிரிவுகளின் சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கணினி அமைப்பைப் பழுதுபார்க்கும் பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதுடன், சரிபார்ப்பு மற்றும்  சான்றளிப்பு செயன்முறை மீள ஆரம்பிக்கப்பட்டவுடன், அது குறித்து பொதுமக்களுக்கு அறியத்தரப்படும். ஏனைய கொன்சியூலர் சேவைகள் எந்தவித தடங்கலும் இன்றி தொடர்ச்சியாக இடம்பெறும்.

இதனால் பொதுமக்களுக்கு ஏற்படுகின்ற அசௌகரியங்களுக்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு  மன்னிப்புக் கோருகின்றது.

வருகை தரும் சேவை நாடுநர்கள் தமது விடயங்கள் சார்ந்த சேவைகளின் சாத்தியக்கூறுகள் குறித்து பின்வரும்  தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி, அறிந்து கொள்ள முடியும்:

  • கொன்சியூலர் விவகாரப் பிரிவு, கொழும்பு         01 0112338812 / 0112338843
  • பிராந்திய அலுவலகம், யாழ்ப்பாணம்                   0212215 970
  • பிராந்திய அலுவலகம், திருகோணமலை            0262223182
  • பிராந்திய அலுவலகம், கண்டி                                    0812384410
  • பிராந்திய அலுவலகம், குருநாகல்                            0372225941

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2022 செப்டம்பர் 16

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image