ஊடகவியலாளர் மீதான தாக்குதலுக்கு சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

ஊடகவியலாளர் மீதான தாக்குதலுக்கு சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

தேசிய மக்கள் சக்தியின் இளைஞர் அமைப்புக்களின் கூட்டமொன்றில் செய்தி சேகரிக்க அழைக்கப்பட்ட லங்காதீப பத்திரிகையின் ஹக்மன பிராந்திய ஊடகவியலாளர் யசந்த ஆரியசேன தாக்கப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கப்படுவதாக சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது. 

நேற்று ஒக்டோபர் 20ஆம் திகதி தாக்குதலுக்கு உள்ளான ஊடகவியலாளர் யசந்த ஆரியசேன கங்கொடகம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக இன்று 21ஆம் திகதி தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் ஹக்மன பொலிஸில் முறைப்பாடு செய்துள்ள ஊடகவியலாளர் யசந்த ஆரியசேன, சம்பவம் தொடர்பில் கருத்து வௌியிடுகையில்,

தேசிய மக்கள் சக்தியின் இளைஞர் அமைப்பின் பிரதிநிதி என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நபர் ஒருவர் லங்காதீப பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் தம்மிடம் வினவி தாக்கியதாக கூநியுள்ளார்.

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் நீதி வழங்கப்படாத பின்னணியில், ஊடக நிறுவனங்களும் ஊடக சமூகமும், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடமிருந்து நீதியை எதிர்பார்க்கின்றன.

இவ்வாறானதொரு நிலையில் இடம்பெற்றுள்ள இந்த தாக்குதல் ஊடக சமூகம் எதிர்பார்க்கும் உண்மையான நீதிச் செயற்பாட்டின் நம்பகத்தன்மைக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என சுதந்திர ஊடக இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, தேசிய மக்கள் சக்தி உடனடியாக தலையிட்டு ஊடகவியலாளர் யசந்த ஆரியசேனவுக்கு நீதி வழங்குமாறும், சம்பவத்திற்கு காரணமான தமது அரசியல் பிரதிநிதி தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் சுதந்திர ஊடக இயக்கம் கேட்டுக்கொள்கிறது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image