ஆசிரியர்களுக்கு அருகிலுள்ள பாடசாலைகளில் நியமனம்: கல்வி அமைச்சின் நிலைப்பாடு அறிவிப்பு

ஆசிரியர்களுக்கு அருகிலுள்ள பாடசாலைகளில் நியமனம்: கல்வி அமைச்சின் நிலைப்பாடு அறிவிப்பு

எரிபொருள் நெருக்கடியை கருத்திற்கொண்டு ஆசிரியர்களுக்கு அருகிலுள்ள பாடசாலைகளில் நியமனங்களை வழங்குவது சிறந்த யோசனையாகும்.


தற்போதைய நிலைமைக்கு மத்தியில் ஆசிரியர்கள் தங்களது வீட்டுக்கு அருகிலுள்ள பாடசாலைக்கு இடம் ஆட்சேர்ப்பு செய்வதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் இந்த யோசனைக்கு நான் மிகவும் விருப்பம் தெரிவிக்கின்றேன்.

எனினும் அதனை நடைமுறைப்படுத்துவதாயின் தீர்க்கமானதொரு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் வியாழக்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

தற்போதுள்ள எரிபொருள் நெருக்கடியை கருத்திற்கொண்டு தமக்கு அருகிலுள்ள பாடசாலைகளுக்கு நியமனத்தை மாற்றித் தருமாறு ஆசிரியர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை உண்மையில் சிறந்ததொரு யோசனையாகும்.

எவ்வாறிருப்பினும், ஆசிரியர்களுக்கு மாத்திரம் அதனை செயற்படுத்த முடியாது. மாணவர்களும் இந்த திட்டத்துக்குள் உள்வாங்கப்பட வேண்டும். எனவே, இது இலகுவாக நடைமுறைப்படுத்தப்படக்கூடிய விடயமல்ல. காரணம், நாட்டில் சுமார் 45 இலட்சம் மாணவர்களும், 2 இலட்சத்து 45,000 ஆசிரியர்களும் உள்ளனர்.

இவர்கள் எல்லோருக்கும் சமமான வகையில் இதுகுறித்த தீர்மானத்தை எடுக்க வேண்டியுள்ளது. எவ்வாறிருப்பினும், இந்த கோரிக்கையை நான் நிராகரிக்கவில்லை.

நாட்டில் 10 ஆயிரத்து 155 பாடசாலைகள் உள்ளன. இவற்றில் இரு பாடசாலைகளில் ஒரு மாணவர் மாத்திரம் உள்ளார். அது மாத்திரமின்றி, 50க்கு குறைவான மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட பாடசாலைகள் 100, 200, 500, 1000 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் என பல பாடசாலைகள் உள்ளன.

இந்த வகைப்படுத்தல்களின் அடிப்படையிலேயே மேற்கூறிய விடயம் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டியுள்ளது. எனவே தான் அது இலகுவான விடயமல்ல என்று கருதுகின்றோம்.

மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில்தான் ஆசிரியர்கள் ஆட்சேர்க்கப்படுகின்றனர். அதாவது ஒவ்வொரு மாணவருக்கும் ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒவ்வொரு பாடத்திற்கும் ஆசிரியர் ஒருவர் இருக்க வேண்டும். நீங்கள் இந்த சந்தர்ப்பத்தில் ஆசிரியர் வெற்றிடம் இருப்பதாக தர்க்கம் செய்ய முடியும். ஆனால் இது அவ்வாறானது அல்ல.

விஞ்ஞான ரீதியாக பார்க்கும்போது இன்று நாளை எனக்கு இந்த தீர்மானத்தை எடுக்க முடியாது. ஏனெனில் ஆராய்ந்தே இந்த விடயம் தொடர்பில் தீர்மானிக்க வேண்டும்.

எனவே அதற்கு நீங்கள் ஒத்துழைப்பு வழங்குவீர்களாயின் மிக விரைவாக அர்ப்பணிப்புடன் கல்வி அமைச்சு, முதலில் மாணவர்களை வீடுகளிலிருந்து செல்வதற்கு நிலைப்படுத்தி விட்டு அதன் பின்னர் அனைவருக்கும் சமமான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும். ஆசிரியர்கள் கட்டாயமாக இருக்க வேண்டும் நேரசூசி இருக்க வேண்டும் இவராகத்தான் கல்வியமைச்சின் செயலாளர் என்ற அடிப்படையில் நான் இந்த பிரச்சினையை பார்க்கின்றேன். என்றார்.

அபிவிருத்தி உத்தியோகத்தர் உட்பட அரச ஊழியர்களுக்கான விசேட அறிவித்தல்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image