அபிவிருத்தி உத்தியோகத்தர் உட்பட அரச ஊழியர்களுக்கான விசேட அறிவித்தல்

அபிவிருத்தி உத்தியோகத்தர் உட்பட அரச ஊழியர்களுக்கான விசேட அறிவித்தல்

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட அரச உத்தியோகத்தர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அபிவிருத்தி உத்தி யோகத்தர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் சந்தன சூரிய ஆராய்ச்சி விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

இது குறித்து அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்

நாட்டின் அரச சேவையை எடுத்துக்கொண்டால் அலுவலகத்திற்கு வருகின்ற அரசு ஊழியர்கள், அத்துடன் களப் பணிகளில் ஈடுபடுகின்ற அரசு ஊழியர்களுக்கு இந்த எரிபொருள் விலை ஏற்றமானது பாரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. எரிபொருள் விலை அதிகரிப்பினால் பஸ்கள் சரியான முறையில் இயங்குவதில்லை. இதன் காரணமாக அரசு ஊழியர்களுக்கு உரிய நேரத்திற்கு வேலைக்கு அலுவலகத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால். அலுவலக வருகைப் பதிவேட்டில் சிவப்பு கோடு இடப்படுகிறது.

அத்துடன் பல மணி நேரமாக எரிபொருளுக்கான வரிசையில் காத்திருக்க வேண்டி இருப்பதனால் மோட்டார்சைக்கிளில் செல்லும் அரசு ஊழியர்களுக்கும் உரிய நேரத்தில் கடமைக்கு சமுளிக்கமுடியாத நிலை உள்ளது. அதுமாத்திரமன்றி எரிபொருள் விலை அதிகரிக்க அதிகரிக்க அதன் பின்னர் ஆகக்குறைந்த பஸ் கட்டணம் 37 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. எனவே அலுவலகத்திற்கு சேவைக்கு சமூகமளிக்கும் அரசு ஊழியர்களுக்கு முன்னர் போல சேவைக்கு செல்ல முடியவில்லை. எனவே இந்த எரிபொருள் விலை அதிகரிப்பானது,  இந்த நாட்டின் அரசு சேவைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினருக்கும் இருக்கின்ற துன்பத்தை இன்னும் மேலும் அதிகப்படுத்தி இருக்கின்றது. மரத்திலிருந்து விழுந்தவனை மாடு மிதித்தது போலவே இப்போது இந்த அரசாங்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. எனவே நாங்கள் அரசாங்கத்திடம் கூறுகின்றோம் உங்களிடம் நிவாரணம் கேட்டு பயனில்லை. உங்களை இதிலிருந்து விரட்டி அடிப்பதுதான் இந்த நாட்டு மக்களுக்கு இருக்கின்ற ஒரே ஒரு தீர்வாகும்.

எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால பஸ்கள் உரிய முறையில் போக்குவரத்தில் ஈடுபடுவதில்லை. போக்குவரத்தில் ஈடுபடுகின்ற பஸ்களிலும் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு ஊழியர்களுக்கும் களப்பணியில் ஈடுபடுகின்ற அரசு ஊழியர்களுக்கும் உரிய நேரத்தில் தங்களது கடமைக்கு சமூகமளிக்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கின்றது.

அரசு துறையின் மற்றும் வேலை செய்யும் தரப்பினருக்கு ஏதேனும் நிவாரணத்தை வழங்குமாறு நாங்கள் அரசாங்கத்திடம் எழுத்துமூலம் கோரியிருந்தோம். அரச சேவைக்கு சேவையில் கடமைக்கு சமூமளிப்பது தொடர்பில் புதிய முறைமை கொண்டு வருமாறு கேட்டிருந்தோம்அல்லது வீட்டிலிருந்து வேலை செய்தல் அல்லது வாரத்தில் சில நாட்களுக்கு மாத்திரம் வேலைக்கு அழைத்தல் இல்லாவிட்டால் அரசு பஸ்களை பயன்படுத்தி இலவச பஸ் சேவையை வழங்குமாறு கேட்டிருந்தோம். இல்லாவிட்டால் அலுவலக போக்குவரத்து வசதிகளை வழங்குமாறு கேட்டிருந்தோம். இவற்றில் ஏதாவது ஒரு மாற்று வழிக்கு செல்லுமாறு அரசாங்கத்துடன் நாங்கள் கேட்டிருந்தோம்.

அரசாங்கம் 22 ஆம் திகதி ஆகும் போது இந்த அரசு ஊழியர்களுக்கு ஏதேனும் நிவாரணத்தை வழங்காவிட்டால் 26ஆம் திகதி ஆகும்போது இந்த நாட்டின் அரசு துறையின் அலுவலகம் மற்றும் துறைசார் களப் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் பல்வேறு நடவடிக்கைகளுக்கு செல்வதுடன், 28ஆம் திகதி ஒரு நாள் அடையாள பணிபுரிய ஈடுபடுகின்றோம்.

அதே போன்று மே மாதம் 6ஆம் திகதி பொது முடக்கத்துக்கு அழைப்பு விடுக்கின்றோம். இந்த அரசாங்கம் வீட்டுக்கு செல்லும் வரை இந்த நாட்டின் தொழிலாளர் வர்க்கம் முன்னெடுக்கும் இந்த போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் - என்றார்.

மேலும் செய்திகள்

நாடுதழுவிய மாபெரும் தொழிற்சங்க போராட்டம்

கிராம உத்தியோகத்தர் பொதுமக்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவித்தல்

போராட்டம் தொடர்பில் பட்டதாரிகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான அறிவித்தல்

அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படுமா? நிதி அமைச்சின் அறிவித்தல் இதோ...

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image