பட்டதாரிகளுக்கு சர்வதேச தொழில் சந்தையில் தொழில்வாய்ப்பு!

பட்டதாரிகளுக்கு சர்வதேச தொழில் சந்தையில் தொழில்வாய்ப்பு!

பட்டதாரிகளுக்கு வெளிநாட்டு தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்துவது குறித்து உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் கருத்து தெரிவித்துள்ளார்.


அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

தற்போது கலைத்துறையில் பட்டம் பெற்றவர்களில் 80 வீதமானோர் தொழிலற்று இருக்கின்றனர். இது கலைத்துறையின் தவறல்ல. அவர்கள் பெற்ற படத்தின் தவறல்ல. இந்த படத்தின் மூலம் தற்போது மாறி வருகின்ற உலகத்துடன் சமாந்தரமாக செல்ல முடியாத நிலை உள்ளது.

அரசியல் விஞ்ஞானத்தில் பட்டம் பெற்ற ஒருவருக்கு ஏன் வெளிநாட்டுத் தொழில் சந்தையில் தொழில் ஒன்றை பெற்றுக் கொள்ள முடியாது. இலங்கையின் அரசியல் சமூக விஞ்ஞானம் வரலாறு என்பது தொடர்பில் கற்பதற்கு சர்வதேச நிறுவனங்களுக்கு அவசியமில்லையா? ஏன் இலங்கை பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றவர்களை அவர்கள் அந்த இடத்திற்கு அழைக்கவில்லை. இந்த இடத்தில் இலங்கையில் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படுகின்ற பட்டத்துடன் மாறி வருகின்ற உலகில் விநியோகம் மற்றும் கேள்விக்கு இடையிலான தன்மையில் குறைபாட்டுத் தன்மை உள்ளது.

இதன் காரணமாகவே எனது எதிர்பார்ப்பாக உள்ள விடயமானது, கலைப்பிரிவில பட்டம் பெறும் பட்டதாரிகளுக்கு அவசியமான சர்வதேச மொழி அதாவது ஆங்கிலம் மற்றும் சர்வதேச தொடர்பாளர் தொடர்பான தொழில்நுட்பம் தொடர்பான பாடங்கள் கற்பிக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.

அவர்கள் அரசியல் விஞ்ஞானம் தொடர்பான பட்டம் பெற்றிருந்தாலும் அவர்களின் திறன் மற்றும் பட்டம் என்பது தற்போதைய சமூகத்துடன் இணைத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

இதன்மூலம் எந்த வகையிலும் கலைத்துறை பட்டத்திற்கான நிவாரணங்களை குறைப்பதாக இல்லை. கலைத்துறை பட்டத்துக்கானது அதிகரிக்கப்படும். ஏனெனில் நாட்டில் இருப்பது அரசியல் பிரச்சினை சமூகப் பிரச்சினை வரலாறு தொடர்பான பிரச்சினை. தற்போதைய சமூகத்துடன் எவ்வாறு வாழ்வது என்பது தொடர்பில் அவர்களை மேலும் பலப்படுத்த வேண்டும். இதுவே என்னுடைய முயற்சியாகும். எனவே கல்வி மற்றும் கல்விசாரா துறையினரிடம் நான் கோரிக்கை விடுக்கின்றேன் இந்த முயற்சிக்கு உங்களுடைய ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image