பயிலுனர்கள் - அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்க்கும் முறைமை இதுதான்

பயிலுனர்கள் - அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்க்கும் முறைமை இதுதான்

பயிலுனர் பட்டதாரிகள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்க்கும்போது பின்பற்றப்படவேண்டிய சரியான முறைமை குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில்,

Joseph_Stalin.jpg

இலங்கை ஆசிரியர் சேவை யாப்புக்கு அமையவே இவர்களின் ஆட்சேர்ப்பு இடம்பெற வேண்டும் என்பது இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தெளிவான நிலைபாடாகும். ஆசிரியர் சேவை யாப்புக்கு அமைய போட்டிப்பரீட்சை நடத்தப்பட வேண்டும். அவர்கள் 35 வயதிற்கு குறைந்தவர்களாக இருக்க வேண்டும். எனவே இந்த சேவை யாப்புக்கு அமைய ஆட்சேர்ப்பு இடம்பெற வேண்டும் என நாங்கள் கூறுகின்றோம்.

இலங்கையில் வருடாந்தம் ஆயிரம் ஆசிரியர்கள் அளவில் ஓய்வு பெறுகின்றனர். அந்த ஓய்வு பெறுகின்ற ஆசிரியர்களுக்கு அமைவாக புதிய ஆசிரியர்களை சேர்க்கப்பட வேண்டும். அவ்வாறு அவர்கள் வரும்போது சேவை யாப்புக்கு அமையவே ஆசிரியர் ஆட்சேர்ப்பு செய்ய வேண்டும்.

நாங்கள் அவர்களுடன் எந்தவிதமான கோபமும் இல்லை. சேவையாப்பு இருக்குமாயின் அதனை மீறக்கூடாது. 52,000 பட்டதாரிகள் அளவில் ஆட்சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இழைக்கப்பட்ட பெரிய அநீதியானது 20 ஆயிரம் ரூபாவுக்கு அவர்களிடம் சேவையை பெற்றுக் கொள்வதாகும். ஆனால் தற்போது இந்த ஆசிரியர் சேவை யாப்பை மீறிய நியமிப்பதில் பயனில்லை.

ஆசிரியர் வெற்றிடத்திற்கு அமைய அந்த விடயங்கள் தொடர்பாக அவதானம் செலுத்தி ஆட்சேர்ப்பு செய்ய வேண்டும். அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட வேண்டும். அவர்கள் பாடசாலையில் பாடசாலையில் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள். அது உண்மை. அவர்கள் கல்விசாரா ஊழியர்கள் என்ற அடிப்படையிலேயே தற்போது இருக்கின்றார்கள். எனினும் அவர்கள் பட்டதாரிகள். அவர்களுக்கு அநீதி ஏற்படக்கூடாது. அந்த பட்டதாரிகளுக்கு அளெரவம் ஏற்படக்கூடாது என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கின்றோம்.

ஆனால் அவ்வாறு இருந்தும் இந்த சேவையை மீறி செயல்படுவதற்கு நாங்கள் இணங்க முடியாது. அவ்வாறெனில் அவர்களை ஆசிரியர் கலாசாலை அல்லர் கல்வியில் கல்லூரிகளுக்கு அனுப்பி கல்வி தொடர்பான பயிற்சியை வழங்கி விட்டுத';தான் அதனை செய்ய வேண்டும்.

இதற்கு முன்னர் ஆட்சேர்க்கப்பட்டவர்களுக்கு பயிற்சி வழங்கப்படவில்லை என்று சிலர் கூறலாம். அவர்களை ஆட்சேர்த்தபோது, பயிற்சியை வழங்கிதான் எடுத்தீர்களா என்று கேட்க முடியும். ஆனால் ஒரே தவறை தொடர்ச்சியாக செய்ய முடியாது. ஒரு தவறு தொடர்ச்சியாகவும் நீடிக்க முடியாது. எனவே, அது ஆகக் குறைந்தது ஒரு இடத்திலாவது நிறுத்தப்பட வேண்டும்.

இவர்களுக்கு ஆசிரியர் பயிற்சியை வழங்கி அதற்கமைய செய்யப்பட வேண்டியது முக்கியமானதாகும். அவர்களுக்கு பயிற்சியை வழங்கி ஏதாவது ஒரு முறையில் அந்த நடவடிக்கை இடம்பெறுமாயின் அது மிகச் சிறந்ததாகும். அவ்வாறின்றி இவர்களுக்கு மூன்று ஆண்டுகளின் பின்னர் தான் போட்டிப்பரீட்சை நடக்க உள்ளது. இது நகைச்சுவையாகும். இவ்வாறாக நகைப்புக்கு உள்ளாக்குவது சரியில்லை. எனவே நியாயமான ஒரு முறைமையில் இந்த செயற்பாடுகள் இடம்பெற வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

பட்டதாரிகள் / டிப்ளோமாதாரிகளுக்கு 20,000 ரூபா கொடுப்பனவை வழங்க நடவடிக்கை

மீண்டும் 5,000 ரூபா கொடுப்பனவு

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image