ஆசிரியர் பயிற்சியை பூர்த்தி செய்தவர்கள் வீடுகளில்- அபிவிருத்தி உத்தியோகர்கள் ஆசிரியர் சேவைக்கு

ஆசிரியர் பயிற்சியை பூர்த்தி செய்தவர்கள் வீடுகளில்- அபிவிருத்தி உத்தியோகர்கள் ஆசிரியர் சேவைக்கு

கல்வியியற் கல்லூரி டிப்ளோமாதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்காமல் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை சேவையில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உதவி அபிவிருத்தி அதிகாரிகளாக அரச சேவையில் இணைக்கப்பட்டவர்களை தாபன விதிக்கோவையை மீறி ஆசிரியர் சேவையில் உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

2015ம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றி கல்வியியற் கல்லூரிகளில் இணைத்துக்கொள்ளப்பட்ட 4537 பேருக்கு இரு வருடங்களான நியமனங்கள் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இவ்வாறான நிலையில் உதவி அபிவிருத்தி அதிகாரிகளை ஏன் ஆசிரியர் சேவைக்குள் என்ன அடிப்படையில் உள்வாங்குகின்றனர்?

நாடு முழுவதும் பல பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. ஆசிரியர் பயிற்சியை முடித்து இரு வருடங்கள் கடந்த நிலையில் இன்னும் நியமனம் வழங்காது தாமதமப்படுத்துவதானது பிள்ளைகளை கல்வியை நாசமாக்கும் செயலாகும்.

இவர்களில் 29 பாடங்களை பூர்த்தி செய்தவர்களும் உள்ளனர். எனவே அவர்களை உடனடியாக சேவையில் இணைத்துக்கொண்டால் நாடு முழுவதும் உள்ள விடயம் சார் ஆசிரியர் பற்றாக்குறையை நீக்கிக்கொள்ள முடியும். ஆசிரியர் சேவை தாபன விதிக்கோவைக்கமைய போட்டிப்பரீட்சை நடத்தப்பட்டு சேவையில் இணைத்துக்கொள்வது அவசியம். அவ்வாறிருக்கையில் எவ்வித பரீட்சையும் நடத்தப்படாமல் உதவி அபிவிருத்தி அதிகாரிகளை சேவையில் இணைத்துக்கொள்ள முயற்சிகள் நடைபெறுகின்றன.

அவர்களுக்கான அரச நியமனத்தை வழங்குவதில் எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. எனினும் பிரச்சினைகளை முகாமைத்துவப்படுத்தும் திறனற்ற அரசாங்கம் கல்வியியற் கல்லூரி பயிலுநர்களுக்கு அநீதி விளைவிப்பதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மவ்பிம

தொடர்பான செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் அறிவித்தல்

 ஆசிரியர் ஆட்சேர்ப்பு வயதெல்லையை அதிகரிக்க வலியுறுத்தல்

ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்க்கப்படாதுள்ளவர்களிடம் மேன்முறையீடு கோரப்பட்டுள்ளது

ஆசிரியர் நியமனத்தை எதிர்பார்க்கும் பட்டதாரிகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நற்செய்தி

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image